Wednesday 4 July 2018

CCL - குழந்தை பராமரிப்பு விடுப்பும்...!
மத்திய அரசின் திருத்தங்களும்...!


CCL (Child Care Leave) குழந்தை பராமரிப்பு விடுப்பு விதிகளில்., மத்திய அரசு., அவ்வப்போது., சில திருத்தங்களை வெளியிடுகிறது. ஆனால்., அந்த திருத்தங்கள்., BSNL ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது சந்தேகமாகவே இருந்து வந்தது. தற்போது., அத்திருத்தங்கள் BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில்., BSNL கார்ப்பரேட் அலுவலகம் 26-06-2018 அன்று உத்திரவு வெளியிட்டு உள்ளது. உத்திரவு எண்: No 1-33/2012-PAT (BSNL) / CCL Dated 26-06-2018.

திருத்த உத்திரவு: No.21011/08/2013-Estt(AL)-FAQ ON CCL Dated 25-03-2013
  • பெண் ஊழியர்களின் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு படிக்க சென்று இருக்கும் நேரத்தில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் மைனர் குழந்தைகளை கவனிக்கும் பொருட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பெண் ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பை மற்ற விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஈட்டு விடுப்பில் (EL) ஒரே முறையாக 180 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு கிடையாது. மற்ற நிபந்தனைகளான 15 நாட்களுக்கு குறைவாக விடுப்பு எடுக்கக் கூடாது அல்லது 3 தவணைகளுக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது போன்ற விதிமுறைகள் பொருந்தும்.
திருத்த உத்திரவு: No.13018/06/2013-Estt (L) Dated 05-06-2014
  • CCL (குழந்தை பராமரிப்பு விடுப்பு) குறைந்தபட்சமாக 15 நாட்களாவது எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது. இது குறித்த மற்ற நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இல்லை.
திருத்த உத்திரவு: No.13018/06/2013-Estt (L) Dated 03-04-2018
  • குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்கள் தங்களது அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று வெளியூர்களுக்கு செல்லலாம்.
  • குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்கள் LTC பயணச் சலுகைகளை பயன்படுத்தலாம்.
  • குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்கள் தங்களது அதிகாரிகளின் முன் அனுமதியோடு., தடையில்லா சான்றிதழ் பெற்று வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

No comments:

Post a Comment