Saturday 14 July 2018

BSNL-ன் சிறகுகள்...! புதிய சேவை...!

Image result for bsnl wings launch photos

 BSNL-ன் WINGS புதிய இணையதள தொலைபேசி சேவை

இந்தியாவில் முதன்முறையாக., நமது BSNL நிறுவனம் புதிய இணையதள தொலைபேசி சேவையைத் துவக்கி உள்ளது. இதுவரை., இணையதள வசதி உள்ளவர்கள் மட்டும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதி இருந்தது. ஆனால்., இணையதளத்தில் இருந்து அலைபேசி (Mobile) மற்றும் தரைவழித்தொலைபேசி (Land Line)-க்கு பேசும் VOIP (Voice Over Internet Protocol) என்னும் வசதியை முதன்முதலில் BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சிறகுகளின் (Wings) சிறப்பு அம்சங்கள்:
  • BSNL Wings சிறகுகளின் சேவை 01-08-2018 முதல் நடைமுறை படுத்தப்படும்.
  • ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூபாய். 1099/-
  • வெளிநாட்டு அழைப்புகளுக்கு வைப்புத் தொகை ரூபாய். 2000/-
  • சிறகுகள் சேவைத் திட்டத்தில்., Video Call வசதி.
  • அலைபேசி Coverage இல்லாத இடங்களிலும் பேசும் வசதி.
  • அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கும் பேசும் வசதி.
  • மாதாந்திர கட்டணம் இல்லை.
  • அமைப்புக் கட்டணம் (Installation Charge) இல்லை.
  • ஓராண்டுக்கு இலவச சேவை.

BSNL நிறுவனத்தின் சிறகுகள் திட்டத்தால்...!
BSNL-ன் சிறகுகள் விரியட்டும்...! சிறப்புகள் பெருகட்டும்...!

No comments:

Post a Comment