Friday 6 July 2018

BSNL மாற்றல் கொள்கை...!
விதி விலக்கும்...! விதி மீறல்களும்...!

Image result for transfer images

நமது BSNL நிர்வாகம்., அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு., BSNL மாற்றல் கொள்கையின் மாற்றலில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதில் ஒரு சில இடங்களில் விதி மீறல்கள் நடந்து உள்ளதாகவும்., அது குறித்து தங்களின் கவனத்திற்கு வந்து உள்ளதாகவும்., மாநில நிர்வாகங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதி உள்ளது.

இக் கடிதத்தில்., அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் மாற்றலில் விலக்கு பெற்று வருகின்றனர் என்றும்., பின்னர் விசாரணை செய்த வகையில் அவர்களுக்கான மாற்றல் உத்திரவு வெளியான பின்னர் இச் சலுகையை தவறாகப் பயன்படுத்தி விலக்கு பெற்றது தெரிய வந்துள்ளது என்றும்., இது போன்று உள் நோக்கத்துடன்., இச் சலுகையைப் பயன் படுத்தக்கூடாது என்றும்., எனவே., இது போன்ற விதி மீறல்களை வருங்காலத்தில் ஆதரிக்கக் கூடாது என்றும் மாநில நிர்வாகங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும்...!
  • அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள்.
  • அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நலச் சங்கம்.
  • ஆதரவு அதிகாரிகள் நலச் சங்கம்.

ஆகிய தொழிற்சங்கங்களின்., சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் சங்க நிர்வாகிகளுக்கு அவர்கள் மாற்றல் பெற்ற பின்., மாற்றலில் விலக்கு வழங்கக் கூடாது என BSNL நிர்வாகம் தெளிவு படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment