Saturday 7 July 2018

உங்கள் வாசல் நோக்கி...! எங்கள் சேவை...!
(BSNL AT YOUR DOOR STEP)


26-06-2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்., BSNL நிறுவனத்தின் வருவாய் தொடர்பாக., விவாதிப்பதற்காக., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL - AUAB) கூட்டம் 04-07-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு AIBSNLEA அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்., தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில்., NFTE., BSNLEU., SNEA., AIBSNLEA., BSNLMS மற்றும் BSNL ATM ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் 3-வது ஊதிய மாற்றத்தை எதிர்நோக்கி உள்ள நிலையில்., ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கொள்ளை அடிக்கும் விலைக் கொள்கை காரணமாக., நமது BSNL நிறுவனம் சந்திக்கும் வருவாய் இழப்பு குறித்து., இக் கூட்டம் தீவிர ஆலோசனை நடத்தியது. மேலும்., BSNL நிறுவனத்தின் விற்பனையையும்., வருவாயையும்., உடனடியாக உயர்த்த வேண்டியதின் அவசியம் குறித்தும் இக் கூட்டம் ஆழமாக பரிசீலித்தது.

நீண்ட விவாதங்களுக்குப் பின் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது:

  • BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து "BSNL AT YOUR DOOR STEP" (உங்கள் வாசல் நோக்கி எங்கள் சேவை) என்ற இயக்கத்தை பொது மக்களிடம் இந்த ஆண்டு முழுவதும் நடத்தி BSNL வருவாயைப் பெருக்குவது.
  • மாநில மற்றும் மாவட்ட மையங்களில் ஊழியர் குழுக்களை அமைத்து., FTTH., Broad band., Leased Line மற்றும் Mobile ஆகிய நமது நிறுவனத்தின் சேவைகளை மக்களிடம் தீவிரமாக சந்தைப் படுத்துவது.
  • ஒவ்வொரு ஊழியர்களையும் வாரத்தில் ஒரு நாட்களாவது சந்தைப் படுத்தும் (Marketing) பணிகளில் ஈடுபடுத்துவது.

அனைத்து மாநில மற்றும் மாவட்ட மையங்களிலும்., உடனடியாக., AUAB கூட்டமைப்பின் கூட்டங்கள் நடத்தப்பட்டு., இம் முடிவுகளை தீவிரமாக., அமுல்படுத்திட வேண்டும் என இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

எனவே தோழர்களே., 26-06-2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட போராட்ட இயக்கங்களையும்., 04-07-2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட BSNL வருவாய் அதிகரிப்பு தொடர்பான., BSNL AT YOUR DOOR STEP" (உங்கள் வாசல் நோக்கி எங்கள் சேவை) என்கின்ற இயக்கத்தையும்., நமது மாவட்டத்தில்., AUAB சார்பாக (NFTE - TEPU - SEWA BSNL) கூட்டாக அமுல் படுத்துவோம்.

No comments:

Post a Comment