Tuesday 10 July 2018

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...! சார்பில்...!
ஊதிய மாற்றம் - உரிமைக்குரல் - ஒலிக்கும்...!
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G (Spectrum) அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாட்டில்., எந்தவித முன்னேற்றங்களும் இல்லை., எனவே., 26-06-2018 அன்று டெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டமைப்பின் கூட்டத்தில்., கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி., கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்: 
  • BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றம் வழங்கிடுக.
  • BSNL வழங்க வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பிற்கு அரசு விதிமுறைகளை அமுல்படுத்துக.
  • BSNL முன்மொழிந்த வரைவு அறிக்கையின் படி BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்க.
  • BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் செய்திடுக.
போராட்ட இயக்கங்கள்:
  • 11-07-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநிலங்களில் உள்ள CCA அலுவலகம் மற்றும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
  • 24., 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.
  • மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் உறுதி மொழிகளை காலதாமதமின்றி அமுல்படுத்திட உடனடியாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்வது.
இந்த., போராட்ட முடிவுகளைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! AUAB..........!
(NFTE - TEPU - SEWA BSNL) கூட்டமைப்பு சார்பாக..........!
அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...!
11-07-2018 - புதன்கிழமை - மதியம் 01-00 மணிக்கு...!
சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக...!
சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - SEWA BSNL)
கூட்டமைப்பு சார்பாக......! மாபெரும்......!
கண்டன...! ஆர்ப்பாட்டம்..........!
நடைபெறும்..........!

தோழர்களே...!
அணி திரள்வோம்...! ஆர்ப்பரிப்போம்...!
ஊதிய மாற்றம் நம் உரிமை...! எனவே...!
உரிமைக்குரல்...! ஒலிப்போம்...!
உரக்க...! ஒலிப்போம்...!
ஒலிக்காமல் ஏதும்...!
பலிக்காது......!

தோழமையுடன்...!
ச.பாலகுமார்., மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment