Monday, 26 March 2018

நமது அகில இந்திய மாநாட்டில்...!
CMD ஆற்றிய உரையின்...! தமிழாக்கம்...!

Image result for bsnl cmd

என் அன்பிற்குரிய இஸ்லாம் அகமது அவர்களே., சந்தேஷ்வர் சிங் அவர்களே., NFTE உறுப்பினர்களே., BSNL ஊழியர்களே., சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

திரு. சந்தேஷ்வர் சிங்கும் அவரது தோழர்களும்., எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் சென்று வணங்கி ஆசி பெரும் பொற்கோவில் உள்ள அமிர்தசரஸ்-ல் நடைபெறும் உங்கள் அகில இந்திய மாநாட்டில் உரையாற்ற என்னை அழைத்தனர். ஆனாலும்., பாராளுமன்றம் கூடியுள்ள நாட்களில் - வேலை நாட்களில் - குறிப்பாக பாராளுமன்றத்தில் நமது துறை தொடர்பான கேள்வி நேரம் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் டெல்லியை விட்டு செல்வது கடினம். இன்று கூட கேள்வி நேரத்தில் எழுப்பப்படவுள்ள ஒரு கேள்விக்காக நான் பாராளுமன்றம் செல்ல வேண்டி உள்ளது.

எனவே., அமிர்தசரஸ் வர நான் விரும்பியும் வர இயலாத காரணத்தால்., பயண நேரம்., பயணச் செலவுகளை குறைக்க வசதியாக வாடிக்கையாளர்களை பயன்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்ளும் Audio Conference (கேட்பொலிக் கலந்துரையாடல்) முறையினையே பயன்படுத்தி உங்களிடம் பேசுகிறேன்.

நண்பர்களே., நாம் தற்போது கடந்து செல்லும் இந்த நேரம் தான் BSNL-க்கு மட்டுமின்றி அதன் ஊழியர்களுக்கும் மிகவும் சோதனையான நேரம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நிலவும் மிகக்கடுமையான போட்டிக்கிடையே., சந்தையில் BSNL நிலைத்திருக்கவே வெகுவாக சிரமப்படவேண்டியிருக்கிறது. என்பது ஒருபுறம் இருப்பினும்., இந்த போராட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் ஊழியர்களுக்கு BSNL நிர்வாகம் அதன் நன்றிகளை உரித்தாக்குவதும் முக்கியமான ஒன்று. உங்கள் ஆலோசனைகளுக்கும்., பங்களிப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த தருணத்தின் தேவையை உணர்ந்து., இதே நோக்கத்துடனும்., மனப்பான்மையுடனும் நாம் அனைவரும் ஒன்றாய் நின்று செயலாற்றினால் - நம்மிடமுள்ள மனிதவளத்திற்கு - அனைத்து சவால்களையும் முறியடிக்க முடியும் என நான் உறுதிபடக் கூறுகிறேன்.

திரு. இஸ்லாம் அகமது அவர்கள் புனித நகரான மெக்கா சென்ற போது., BSNL நிறுவனத்திற்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு அவரை நான் கேட்டுக் கொண்டேன். அந்த பிரார்த்தனையை மேற்கொண்ட அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

"நாம் செல்ல வேண்டிய பாதை எத்துணை கடினமானது எனினும்., அதில் பயணிப்பது எத்துணை கடினமானது எனினும்., நாம் முன் சென்றே ஆக வேண்டும். வெற்றி பெரும் நாள் வெகு தொலைவில் இருந்தாலும்., வெற்றி ஒரு நாள் வந்தே தீரும்" என்ற சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

BSNL-ன் முன்னேற்றம்., BSNL நிலைத்திருத்தல்., 3-வது ஊதிய மாற்றம் ஆகிய அனைத்தும் தூரமாகவோ., காலம் தாழ்த்தியோ இருக்கலாம்., ஆனால் இவையனைத்தும் தவறாமல் ஒரு நாள் நடந்தே தீரும்.

3-வது ஊதிய மாற்றம் குறித்து அறிய நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். 3-வது ஊதிய மாற்றக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் பணியில் உள்ள BSNL ஊழியர்களுக்கும்., ஓய்வு பெற்றோர்களுக்கும் நிறைவேற்றப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைபவன் நானாகத்தான் இருப்பேன் என்று உறுதிபட கூறுகின்றேன்.

மாண்புமிகு அமைச்சர் திரு. மனோஜ் சின்கா அவர்களின் சாதகமான அணுகுமுறைக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவரது துணையோடு வெகு சீக்கிரமே 3-வது ஊதிய மாற்றம் பெறுவோம் என நான் உறுதிபட நம்புகிறேன்.

நம் துறையின் செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன் அவர்களும் மிகவும் சாதகமாகவே உள்ளார். என்பது மட்டுமின்றி ஊதிய மாற்றத்தை முன் கொண்டு செல்லும் வழிவகைகளையும் அவர் செய்து வருகிறார்.

நமது BSNL BOARD-ல் CFA, FINANCE ஆகிய இரண்டு டைரக்டர் பதவிகள்  காலியாக உள்ளன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். CM பதவியும் வெகு விரைவில் காலியாக உள்ளது. முக்கியமான இந்த கால கட்டத்தில் ஒரு முழுமையான BSNL BOARD அவசியம் தேவை என்பதால்., அவ்விடங்களை நிரப்ப அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன்.

SWAS (Service With a Smile) ஒரு வெற்றி மந்திரம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். BSNL நிலைத்திருக்க., வளர SWAS-ஐ தொடர்ந்து முன் கொண்டு செல்லும்படி ஊழியர்களிடத்தேயும்., அதிகாரிகளிடத்தேயும் கூறுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

மார்ச் 14 முதல் 16 வரையான மூன்று நாட்களிலும் விவாதிக்க., உரையாற்ற., கேட்க உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் BSNL-ன் வளர்ச்சிக்கான சிறந்த விடையினை நீங்கள் பெற்று இருப்பீர்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களிடையே நான் இன்று இல்லை எனினும்., நமது அன்பிற்குரிய BSNL-ன் வளர்ச்சிக்காக., ஊழியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக., ஓய்வூதியர்களின் நலனுக்காக எடுக்கப்படும் கூட்டு முயற்சியில்., நூறு சதம் நான் உங்களோடு இருப்பதாக கருத்துமாறு தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி...!

No comments:

Post a Comment