Monday 26 March 2018

அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள்...!


நமது NFTE., அகில இந்திய சங்கத்தின்., 5-வது.,
அகில இந்திய மாநாடு., பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்-ல்
2018 மார்ச் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம் மாநாட்டில்., நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • நமது அகில இந்திய மாநாடு., தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான.,  உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு மாற்றாக நிர்வாகம் முன்மொழிந்த Check off System முறையை ஏற்கவில்லை. ஆனால்., உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் விதிகளில் உள்ள 50% சதவீத நிபந்தனையை நீக்கிட., உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.
  • ஊதிய மாற்றம்: 8-வது சுற்று ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை., DPE வழிகாட்டுதல்படி இருதரப்புக் குழு அமைத்திட காலதாமதம் செய்வதற்கு இம் மாநாடு., அதிருப்தியை தெரிவிக்கிறது. உடனடியாக., இருதரப்புக் குழு அமைத்திடவும்., பேச்சுவார்த்தையை துவக்கிடவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும்., NFTE சங்கத்தின் கடிதத்திற்கு., பிரதமர் அலுவலகம் DPE மூலம் வழிகாட்டிய அடிப்படையில் DOT மற்றும் BSNL., Affordability பிரிவில் இருந்து விதிவிலக்கு பெற அமைச்சரவையை அணுகி பெற வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.
  • BSNL CDA விதி 55(II) b: BSNL ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்., BSNL CDA விதி 55 (II) b என்ற விதி BSNL நிறுவனத்திற்கு பொருந்தாது. எனவே., இந்த பாதகமான பிரிவை., BSNL CDA விதிகளில் இருந்து நீக்க வேண்டும்.
  • DCRG (Death Cum Retirement Gratuity): மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வரும் உயர்த்தப்பட்ட DCRG-ஆன (Death Cum Retirement Gratuity) ரூபாய். 20 லட்சம் பணப் பலனை 01-01-2016 முதல் BSNL நிறுவனத்திற்கும் பொருந்தும் என்ற DOP&T உத்திரவில் 6.2 பிரிவின்படி 50% சதவீதம் அகவிலைப்படி உயர்ந்தால் ரூபாய். 25 லட்சம் என்ற பிரிவும் BSNL-க்கு பொருந்தும் என உத்திரவு மாற்றப்பட வேண்டும்.
  • டவர் நிறுவனம்: தனி டவர் நிறுவனம் 04-01-2018 முதல் நிறுவப்பட்டு., செயல்பட்டு வருவதை இம் மாநாடு ஆழமாக பரிசீலித்தது. இது BSNL நிதி ஆதார தன்மையை பாதிக்கும் என்பதால் BSNL மற்றும் DOT நிறுவனங்களிடம் கீழ்கண்டவற்றை பரிசீலிக்க இம் மாநாடு கோருகிறது.
  1. 04-01-2018 வரையில் BSNL நிதியில் உருவாக்கப்பட்ட செல் கோபுரங்களை BSNL கட்டணமின்றி பயன்படுத்த வேண்டும்.
  2. இனி., புதிய டவர் நிர்மானத்திற்கு (அ) உருவாக்கத்திற்கு BSNL நிதியை பயன்படுத்த கூடாது.
  3. Anchor Status குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்.
  4. டவர் நிறுவன சொத்துக்கு ஈவுத்தொகை (Dividend) வழங்குவதை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
  5. தனியார்மயம் மற்றும் பங்கு விற்பனை கூடாது.
  6. ஊழியர்களின் மனிதவளம், ஓய்வூதியம் மற்றும் சேவை நிலைகள்  அனைத்தையும் தொழிற்சங்கங்களுடன் விவாதித்து இறுதி செய்ய வேண்டும்., ஊழியர்களை நிரந்தரமாக மாற்றம் செய்யக் கூடாது.
  • ஓய்வூதிய பங்களிப்பு (Pension Contribution): ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான DOP&T-ன் 19-11-2009 தேதியிட்ட உத்திரவு BSNL நிறுவனத்திற்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எனவே., BSNL ஊழியர்களுக்கான ஓய்வூதிய பங்களிப்பை Actual Pay (அடிப்படை சம்பளம்) அடிப்படையில் பிடித்தம் செய்ய வேண்டும். மேலும்., BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு இடையே பாரபட்சம் கூடாது.
  • Multitasking: NFTE சங்கம் தேசியக்குழுவில் விவாதித்து., நிர்வாகம் ஏற்றுக்கொண்ட Multitasking (பல்பணி) பலப்பணி தன்மை கொண்ட ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.
  • பென்ஷன் மாற்றம்: நமது தொலைத்தொடர்பு அமைச்சரின் உறுதிமொழி அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் உடனடியாக செய்திட வேண்டும்.
  • 2-வது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட தேக்கநிலை பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்கி., 3-வது ஊதிய மாற்றத்திற்கு முன் தீர்க்க வேண்டும்.                           

No comments:

Post a Comment