Sunday 25 March 2018

வரலாற்று சிறப்பு மிக்க...!
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு...!

No automatic alt text available.

நமது NFTE., அகில இந்திய சங்கத்தின்., 5-வது.,
அகில இந்திய மாநாடு., பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்-ல்
2018 மார்ச் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நிகழ்வாக., நமது தேசியக் கொடியை.,
அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் அகமது ஏற்றி வைக்க.,
நமது சங்கக் கொடியை., அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.
C.சந்தேஷ்வர் சிங்., பல மாநில மொழிகளின் விண்ணதிரும்
முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார்.

கொடி ஏற்று நிகழ்வினைத் தொடர்ந்து., தியாகிகளுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக., தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி
செலுத்திய பின்., அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் அகமது
தலைமை ஏற்க., AITUC பஞ்சாப் மாநிலக்குழுவின் செயலரும்
வரவேற்புக்குழுவின் தலைவருமான தோழர். அமர்ஜித்
சிங் அசல் வரவேற்புரை ஆற்றினார்.

நமது 5-வது அகில இந்திய மாநாட்டினை துவக்கி...!
வைத்து...! AITUC-யின் அகில இந்திய பொதுச் செயலர்
தோழியர். அமர்ஜீத் கவுர் எழுச்சிமிகு......!
துவக்க உரை ஆற்றினார்.

மாநாட்டின் துவக்க நிகழ்வில்...!
தோழமை சங்கங்களின் சார்பாக..........!
BSNLEU அகில இந்திய தலைவர் தோழர். பல்பீர் சிங்,
SNEA அகில இந்திய பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின்,
AIBSNLEA அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்,
BSNLMS அகில இந்திய பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார்,
TEPU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். V.சுப்புராமன்
மற்றும்...! SEWA-BSNL அகில இந்திய பொதுச் செயலர்
தோழர். N.D.ராம் ஆகியோர் பொது அரங்கில்......!
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நமது CMD உயர்திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்கள்
பாராளுமன்றத்தில் நமது துறை தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள
ஒரு கேள்விக்கு......! பதில் அளிப்பதற்காக பாராளுமன்றம் செல்ல
வேண்டி இருப்பதால்., நமது மாநாட்டில் பங்கேற்க முடியாத
நிலையில்., டெல்லியில் இருந்து., கேட்பொலிக்......!
கலந்துரையாடல் (Audio Conference)......!
முறையில் வாழ்த்துரை மற்றும்...!
சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டின் முதல் நாள் பிற்பகல் நிகழ்வில்...!
மத்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் செயலர்கள் மற்றும்
சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தின்
பாரம்பரிய முறைப்படி கௌரவிக்கப்பட்டனர்.

நமது 5-வது அகில இந்திய மாநாட்டின்...!
2-ஆம் நாள் நிகழ்வாக...! பொருளாய்வுக்குழு துவங்கியது.
பொதுச் செயலர் முன்வைத்த செயல்பாட்டு அறிக்கை மீது......!
மத்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் செயலர்கள்
மற்றும்......! சார்பாளர்கள் விவாதம்
நடைபெற்றது......!

நமது 5-வது அகில இந்திய மாநாட்டின்...............!
3-ஆம் நாள் நிகழ்வாக...! பொருளாய்வுக்குழு தொடர்ந்தது...!
3-ஆம் நாள் 
பொருளாய்வுக்குழுவில்...! நமது மாநிலச்
செயலர் 
தோழர். K.நடராஜன் விவாதத்தில்...!
பங்கேற்று...! 
உரை ஆற்றினார்.

சார்பாளர்கள் விவாதத்தில்...! நமது தோழர்கள்...!
கிளை மட்ட 
பிரச்சனைகள் 
துவங்கி......! 
ஆக உயர்ந்த......!
அரசாங்கத்தின் 
கொள்கை 
நிலைப்பாடுகள் 
வரை...!
அனைத்தையும் 
அலசினர்...!

2 நாட்கள் (15 & 16.03.2018) தொடர்ந்து நடைபெற்ற...!
சார்பாளர்கள் விவாதம் நிறைவு பெற்றது. விவாதத்திற்கு......!
பதில் 
அளித்து., பொதுச் செயலர் உரை நிகழ்த்திய பின்...!
செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு - செலவு
அறிக்கை 
ஏகமனதாக ஏற்கப்பட்டது.

மாநாட்டில்., தீர்மானக்குழு முன்மொழிந்த தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு...! மாநாட்டில்...!
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 

மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

தலைவர்: தோழர். இஸ்லாம் அகமது, NTR., உத்திரப் பிரதேசம் (கிழக்கு)

பொதுச் செயலர்: தோழர். C.சந்தேஷ்வர் சிங், பாட்னா (பீகார்)

துணைப் 
பொதுச் செயலர்: தோழர். K.S.சேஷாத்திரி, பெங்களூர் (கர்நாடகா)

பொருளாளர்: தோழர். A.ராஜ்மௌலி, கரீம்நகர் (தெலுங்கானா)

உள்ளிட்ட 24 நிர்வாகிகள் மற்றும்
19 சிறப்பு அழைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் சார்பில் தோழர்கள்:

சம்மேளனச் செயலர்: தோழர். P.காமராஜ், சென்னை

துணைத் தலைவர்: தோழர். S.பழனியப்பன், திருச்சி

சிறப்பு அழைப்பாளர்: தோழர். A செம்மல் அமுதம், கோவை

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு...!
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்...!

மிக முக்கியமான கால சூழ்நிலையில் நடைபெற்ற...!
NFTE பேரியக்கத்தின் 5-வது அகில இந்திய 
மாநாட்டில்...!
காஷ்மீர் 
முதல் கன்னியாகுமரி வரை....................!
3000-க்கும் மேற்பட்ட 
சார்பாளர்கள் மற்றும்
பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மாநிலத்தின் சார்பில்...! 85 சார்பாளர்கள் மற்றும் 250
பார்வையாளர்கள் என 335 தோழர்கள் பங்கேற்றனர்.

நமது சேலம் மாவட்ட சங்கத்தின்...!
சார்பில்...! 
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் 
மற்றும்
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன் 
உள்ளிட்ட
10 சார்பாளர்கள் மற்றும் 18 பார்வையாளர்கள் என
28 தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெரும் பொருட்செலவு...! கடுமையான வெய்யிலின் தாக்கம்...!
ஏறத்தாழ 6000-க்கும் மேற்பட்ட கி.மீ தூர பயணம்...! என எதையும்...!
சிரமமாக பொருட்படுத்தாது...! மாநாட்டில்...! பங்கேற்று...!
தங்களது...! பொறுப்புணர்வை...! வெளிப்படுத்திய...!
அனைத்து தோழர்களுக்கும்...! 
நமது...!
நன்றி பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment