Saturday 3 March 2018

ஒப்பந்த ஊழியர்களின்...! ஊதிய தாமதத்தை...!
கண்டித்து...! NFTE மற்றும் TMTCLU சார்பாக...! 
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்...!
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில்...! பெரும் பகுதி......!
ஊழியர்களுக்கு...! 2018 ஜனவரி மாத ஊதியம் (2018 பிப்ரவரி மாதம்
முடிந்தும் கூட...!)., வழங்கப்படாத அவலநிலையை., கண்டித்து...............!
NFTE - BSNL மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக..........!
01-03-2018 வியாழக்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு......!
சேலம்., PGM அலுவலகம் முன்பாக., மாபெரும்...!
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்ட
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் TMTCLU
மாவட்ட தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர்
கூட்டுத் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்கான...! கோரிக்கை முழக்கத்தை...!
NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர்.
S.கண்ணையன் எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி...! NFTE மாவட்ட செயலர்
தோழர். C.பாலகுமார், TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர்.
A.சண்முகசுந்தரம் மற்றும் TMTCLU மாவட்ட செயலர்
தோழர். M.இசையரசன் ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., TMTCLU மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்
நன்றி கூறி., ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட., தோழர்.,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

26-02-2018 அன்று துணைப் பொது மேலாளர் (NWP-CFA)
அவர்களை சந்தித்து., கோரிக்கையை வலியுறுத்தியிருந்தோம்.
01-03-2018 அன்று ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து...! மாவட்ட.,
துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களை.,
சந்தித்து., பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இப் பேச்சுவார்த்தையில்., துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்)
அவர்கள்., இன்று (01-03-2018) அல்லது நாளை (02-03-2018)-க்குள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடா
செய்யப்படும் என உறுதி அளித்தார்.

துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) அளித்த.,
உத்திரவாதத்தின் படி......! 02-03-2018 அன்று காலையே., ஒப்பந்த
ஊழியர்களுக்கு., சம்பளப் பட்டுவாடா நடைபெற்றது.

 ஒப்பந்த ஊழியர்களுக்கு...! சம்பளப் பட்டுவாடா...!
நடைபெற...! காரணமாக...! இருந்த...! இவ் ஆர்ப்பாட்டத்தில்..!
கலந்து கொண்ட அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., ஒப்பந்த
ஊழியர்களின் சம்பளப் பட்டுவாடாவிற்கு., ஏற்பாடு செய்த.,
மாவட்ட நிர்வாகம் மற்றும் NFTE - BSNL மற்றும்
TMTCLU மாநில சங்கங்களுக்கும்.,
&
NFTE - BSNL மற்றும் TMTCLU ஆகிய இரண்டு மாவட்ட......!
சங்கங்களின் சார்பாக., நெஞ்சார்ந்த நன்றியை...!
தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment