Sunday 4 March 2018

அத்துக்கூலிக்கு...! அடையாளம் தந்த...!
TMTCLU...! சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்...!


நமது TMTCLU., சேலம் மாவட்ட சங்கத்தின்., மாவட்ட செயற்குழுக்
கூட்டம்...! NFTE., மாவட்ட சங்க அலுவலகத்தில்., 01-03-2018
வியாழக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு...!
TMTCLU..........! மாவட்ட தலைவர் தோழர்.
N.சிவமோகன் தலைமையில்......!
நடைபெற்றது...............!

TMTCLU மாவட்ட உதவிச் செயலர் தோழர். S.சக்திவேல்
வரவேற்புரை ஆற்ற., மாவட்ட துணைத் தலைவர்
தோழர். S.V.சுரேஷ் பாபு அஞ்சலி
உரை., நிகழ்த்தினார்.

செயற்குழுவை துவக்கி வைத்து., TMTCLU மாநில உதவிச் செயலர்
தோழர். A.சண்முகசுந்தரம் துவக்க உரை நிகழ்த்தினார்.

ஆய்படுபொருள் ஏற்புக்கு பின்., மாவட்ட செயலர் தோழர்.
M இசையரசன் விவாதத்திற்கான ஆய்படுபொருளை அறிமுகம்......!
செய்து வைத்து., மாவட்ட சங்க செயல்பாடுகள்., ஒப்பந்த......!
ஊழியர் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்...!
பற்றி...! அறிமுக உரை ஆற்றினார்.

TMTCLU......! மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
தனது நிதிநிலை அறிக்கையில்., சந்தா மற்றும்
நன்கொடைகளின் தேவைகளைப்
பற்றி எடுத்துரைத்தார்.

NFTE மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி.,
மற்றும் NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்.,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செயற்குழுவை செழுமைப்படுத்திட 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த
ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்படு பொருள் விவாதங்களுடன்
தங்கள் பகுதி பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.

NFTE., மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும்
NFTE., மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிறைவாக., TMTCLU தமிழ் மாநில பொதுச் செயலர்
தோழர். R.செல்வம் நிறைவுரை ஆற்றினார்.

TMTCLU.,
தமிழ் மாநில பொதுச் செயலரின் நிறைவுரையைத் தொடர்ந்து...!
செயற்குழுவின் சிறப்பு அம்சமாக...!
நிர்வாகம் தரமறுத்த...! ஒப்பந்தக்காரர்கள் தரமறுத்த...!
ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான......!
பணி செய்திடும் போது தங்களின் பாதுகாப்பிற்கு அவசியமான...!
அடையாள அட்டையை...! தங்களுக்கான அடையாளத்தை...!
TMTCLU சங்கத்தின் சார்பாக...!
ஒப்பந்த ஊழியர்களுக்கு...! வழங்குவதற்கான நிகழ்வை...!
NFTE மற்றும் TMTCLU.,
சேலம் மாவட்ட சங்கங்களின் சார்பாக...!
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந் நிகழ்வில்., TMTCLU., தமிழ் மாநில பொதுச் செயலர்
தோழர். R.செல்வம் ஒப்பந்த ஊழியர்களுக்கு.,
அடையாள அட்டையை வழங்கினார்.

இறுதியாக., மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
நன்றி கூற., இரவு 10-00 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
இனிதே..........! முடிவுற்றது.

இச் செயற்குழுவில்., 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்
பங்கேற்று..........! சிறப்பித்தனர்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும்., காலதாமதமின்றி உரிய தேதியில்., ஊதிய பட்டியலுடன்., ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை., எடுக்க., நிர்வாகத்தை வலியுறுத்துவது.
  • அனைத்து  ஒப்பந்த ஊழியர்களுக்கும்., BSNL நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்துவது.    
  • ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி., காப்பீடு திட்டத்தை (தனி காப்பீடு திட்டத்தை) அமுல்படுத்திட., நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்களை வலியுறுத்துவது.
  • TMTCLU மாவட்ட மாநாட்டை 2018 ஏப்ரல் மாத இறுதிக்குள் மிகச் சிறப்பாக நடத்துவது.
  • நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்., ஒப்பந்த ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில்., தமிழ் மாநில நிர்வாகத்திற்கும்., நமது NFTE மற்றும் TMTCLU மாநில சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில்., அமுல்படுத்திட நிர்வாகத்தை வலியுறுத்துவது.


















































இச் செயற்குழுவில்., 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்
பங்கேற்று..........! சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment