Sunday 26 November 2017

வரலாற்றில் இடம் பெறுவது போராட்டம்...!
வரலாற்றை படைப்பது வர்க்கப் போராட்டம்...!
அந்த வகையில்...! புதிய வரலாற்றை...!
புதிய சகாப்தத்தை படைத்த...!
சேலம் மனித சங்கிலி...!
போராட்டம்...!


நமது சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL)
முடிவின்படி., புதிய டவர் நிறுவனத்தை உருவாக்கி BSNL
நிறுவனத்தை தனியார் மயப்படுத்திட நினைக்கும்
நடுவண் அரசை கண்டித்தும்., 3-வது ஊதிய 
மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்திட
வலியுறுத்தியும்...............!
&
அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தின் ஒரு
பகுதியாக., சேலம் மாவட்டத்தில் மனித சங்கிலி இயக்கம் (கரம்
கோர்க்கும் போராட்டம்) மற்றும் கோரிக்கை விளக்கக்
கூட்டம் 23-11-2017 வியாழக்கிழமை அன்று
நடைபெற்றது.

மனித சங்கிலி இயக்கத்தின் முதல் நிகழ்வான.,
கோரிக்கை விளக்கக் கூட்டம் சேலம்., மெயின் தொலைபேசி
நிலைய அலுவலக வளாகத்தில் மதியம் 03-00 
மணிக்கு துவங்கியது.

இக் கோரிக்கை விளக்க கூட்டத்திற்கு.,
NFTE மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி
தலைமை தாங்கினார்.

NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
கோரிக்கை விளக்க கூட்டத்தை துவக்கி வைத்து.,
துவக்க உரை நிகழ்த்தினார்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி
மற்றும்...! SEWA BSNL மாவட்ட செயலர் தோழர். 
R.மாதையன் ஆகியோர்...! கண்டன...!
சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்.,
நன்றி கூறி., கோரிக்கை விளக்க கூட்டத்தை.,
முடித்து வைத்தார்.

கோரிக்கை விளக்க கூட்டத்தினை தொடர்ந்து...!
மனித சங்கிலி இயக்கம் (கரம் கோர்க்கும் போராட்டம்)., முறையாக.,
காவல் துறையின் அனுமதி பெற்று., அந்த அனுமதியின் படி.,
(மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை)., சேலம்.,
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள...!
அண்ணா சிலை முதல் சத்தியம்
கார்னர் வரை..........!
&
(ஏதோ பதிவிற்காக அல்லாமல் உண்மையாக நின்ற.,
தோழர், தோழியர்களின் அடிப்படையில்) சுமார் 400-க்கும்
(50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட) மேற்பட்ட (NFTE., TEPU மற்றும்
SEWA-BSNL ஆகிய சங்கத் தோழர்கள் மட்டும்) தோழர்., 
தோழியர்கள் கரம் கோர்த்து., மத்திய அரசின்
தடை சங்கிலி., உடைத்திட., மனித...!
சங்கிலியாக நின்றனர்.

மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன்.,
மனித சங்கிலி இயக்கம் துவங்கிய 04-00 மணி முதல் 05-00 மணி
வரை., ஒரு மணி நேரமும்., ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல்., கோரிக்கை
முழக்கமிட..., ஒரு குழுத் தோழர்கள்., அண்ணா சிலை முதல்...!
சத்தியம் கார்னர் வரை...! ஒரு மணி நேரம் முடியும்...!
வரை...! பல முறை...! (திரும்ப., திரும்ப.,)
சென்று...! வந்தனர்...!

தோழர்களே...! நமது சேலம் மாவட்டம் எத்தனையோ.,
போராட்ட களம் கண்ட மாவட்டம்...! ஆனால் முதல் முறையாக.,
நம்முடைய அலுவலகத்தை விட்டு வெளியே வந்து...!
தனியாக...! சேலம்., பழைய பேருந்து நிலையம்
அருகே உள்ள அண்ணா சிலை முதல்...!
சத்தியம் கார்னர் வரை...!
&
நம் சக்தி அறியாமல்......! நாம் போராட்டம் நடத்தினோம்.........!
அறிந்து கொண்டோம்......! நம் சக்தியை நாம் மட்டும்.........!
அல்லாமல்...! அனைவரும் அறிந்திட செய்தோம்...!
புதிய வரலாற்றை...! புதிய சகாப்தத்தை...!
படைத்தோம்....................!

சேலம் மாவட்டம் முழுவதும் நம் போராட்டம் பேசப்பட்டது.
சேலம்., பழைய பேருந்து நிலையம் முன்பு என்பதால்.,
சுமார் 10-க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும்
தொலைக்காட்சி., செய்தி நிறுவனங்கள்
நம் போராட்டத்தை., பதிவு...!
செய்தனர்..........!
&
பல நிறுவனங்கள் செய்தியை பிரசுரித்தும்.,
செய்தியை ஒளி பரப்பியும்., நமக்கு உதவினர்., அவர்களுக்கும்.,
முழு பாதுகாப்பை நல்கிய., காவல் துறை அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களுக்கும்., நமது......!
நன்றி...! பாராட்டுக்கள்...!

சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து., சுமார் 400-க்கும்.,
மேற்பட்ட தோழர்., தோழியர்கள் மனித சங்கிலி இயக்கத்தில்.,
கலந்து கொண்டது என்பது., சேலம் மாவட்ட (NFTE., TEPU
மற்றும் SEWA-BSNL) தொழிற்சங்கங்கள் படைத்த.,
புதிய வரலாறு......! புதிய சகாப்தம்......!
என்றால் அது மிகையாகாது.

மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட.,
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!



















































மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட.,
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment