Thursday 7 December 2017

மக்களவை உறுப்பினரிடம்...! மனு அளித்தல்...!


அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (ALL UNIONS AND
ASSOCIATIONS OF BSNL) முடிவின் படி., சேலம் மக்களவைத் தொகுதி
(Salem Constituency) நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament - Lok Sabha)
மாண்புமிகு. V. பன்னீர் செல்வம் அவர்களை., 04-12-2017 திங்கட்கிழமை
அன்று மாலை 07-00 மணிக்கு., அவரது அலுவலகத்தில்., சேலம்
மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக நேரில் சந்தித்து.,
&
நமது கோரிக்கைகள்., அடங்கிய மனுவை.,
வழங்கி., விவாதித்தோம். நமது கோரிக்கைகளை., நிதானமாக.,
கேட்டு அறிந்த., நாடாளுமன்ற உறுப்பினர் V. பன்னீர் செல்வம்
அவர்கள்., நாடாளுமன்றத்தில் நமது கோரிக்கைகளை
வலியுறுத்துவதாக உறுதி அளித்தார்.

இந்த மனு அளித்தல் நிகழ்வில்.,
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி,
SEWA-BSNL துணை மாவட்ட செயலர் தோழர். P.A.சிவச்சந்திரன்,
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்,
NFTE மு. மாநில துணைத் தலைவர் தோழர். P.ராஜா,
SEWA-BSNL மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர் செல்வம்
&
NFTE மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி,
NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், NFTE மாவட்ட
அமைப்பு செயலர் தோழர். S.R.செல்வராஜ், NFTE மாவட்ட உதவி
செயலர் தோழர். P.சுப்ரமணி, NFTE மாவட்ட துணைத் தலைவர் தோழர்.
P.தேவா, NFTE மாவட்ட உதவி செயலர் தோழர். G.இறைமணி,
NFTE மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R.மணி
&
TMTCLU மாநில உதவி செயலர் தோழர்.
A.சண்முக சுந்தரம், TMTCLU மாவட்ட செயலர் தோழர்.
M.இசையரசன் மற்றும் NFTE நகர., ஊரக கிளை செயலர்கள்
உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.






























மனு அளித்தல் நிகழ்வில்., பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்.,
மாவட்ட., BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள்
சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment