Thursday 27 July 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
பணித்தன்மைக்கேற்ற...! ஊதியம்..!


நமது NFTE மற்றும் TMTCLU தமிழ் மாநில சங்கங்களின்.,
தொடர் முயற்சியின் காரணமாகவும்., துணைத் தொழிலாளர்
நல ஆணையருடன் நடைபெற்ற... முத்தரப்பு மற்றும்......!
சமரசப்பேச்சு வார்த்தைகளின் காரணமாகவும்.,
&
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள்.,
செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில்...!
மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization)., திறனுக்கேற்ற......!
ஊதிய மாற்றத்தை நிர்ணயிக்க., தமிழ் மாநில நிர்வாகம்
24-07-2017 அன்று தொழிலாளர் மற்றும் தொழில்துறை
அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி..........!
உத்திரவை வெளியிட்டுள்ளது.

உத்திரவு எண் : ADMN/100-03/CL - ISSUES/2017-18/28 dt at Ch-6 the 24-07-2017

இந்த உத்திரவுப் படி:

ஒப்பந்த ஊழியர்கள் கீழ்க்கண்ட 3 பிரிவுகளாக மறுவகைப் படுத்தப்பட்டுள்ளனர் (Re-Categorization).
  • Unskilled Labours (திறன் அற்ற ஊழியர்கள்) : அலுவலக பராமரிப்பு பணியாளர்கள் (Housekeeping) / அலுவலக அறைப் பணியாளர்கள் (Room attendants) / அலுவலகப் பணியாளர்கள் (Office attendants) / உதவியாளர்கள் (Helpers) / துப்புறவு பணியாளர்கள் (Sweepers)
  • Semiskilled Labours (அரைத்திறன் ஊழியர்கள்) : உள்கட்டமைப்பு பராமரிப்பு பணியாளர்கள் (Infrastructure Maintenance) / வெளிப்புற கட்டமைப்பு பராமரிப்பு பணியாளர்கள் (External Plant Maintenance) / கேபிள் பழுது மற்றும் பராமரிப்பு பணிக்காக குழி எடுத்தல் (Digging of Pits for Cable Fault) / தொலைபேசி பழுது மற்றும் பராமரிப்பு பணிக்கு உதவுதல் (Clearance and assisting in Line Fault) / TT ஊழியர்களின் பணிக்கு உதவுதல் (Helpers of Phone Mechanics).
  • Skilled Labours (திறன் ஊழியர்கள்) : ஓட்டுநர் (Drivers) / கேபிள் இணைப்புப் பணி ( Cable Jointing) / MDF பழுது மற்றும் பராமரிப்பு பணி / Pillar பழுது மற்றும் பராமரிப்பு பணி / கணினிப்பணி / எழுத்தர் பணி / Electrician பணி / Mechanic பணி / Technician பணி / Telephone Operators பணி / TT இல்லாத பகுதிகளில்  (அ) நேரங்களில்., TT ஊழியர்கள் செய்திடும் பணி.

மேற்கண்ட., ஒப்பந்த தொழிலாளர்களை மறுவகைப்படுத்துவதற்கு.,   
(Re-Categorization)., மாவட்ட (SSA) அளவில்... ஒரு குழு அமைத்து., 
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைத் திறனை......!
தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களை., மறுவகைப்படுத்தி...!
ஊதிய மாற்றத்திற்காக., செயல்முறை... படுத்தும்., போது...!
அந்தந்த., தலமட்ட அதிகாரிகள்... கீழ்க்கண்ட..........!
முறைகளில்... ஆய்வு., செய்து..........!
உறுதிப்படுத்த வேண்டும்.

உறுதிப்படுத்துவதற்கான., ஆய்வு முறை :
  • ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் வேலைமுறைகளில் ஒழுக்கம் மற்றும் காலம் தவறாமல் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்தின் தேவைக்கேற்ப அவர்களின் பணியிடங்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஒப்பந்த தொழிலாளர்கள் செய்திடும் பணி., தொழிற்தரத்துடன் இருக்க வேண்டும்.
  • ஒப்பந்த தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல உறவை வைத்துக் கொள்ளவேண்டும்., மற்றும் அவர்கள் BSNL நிறுவனத்தின் மதிப்பு குறையும் படியான பாதகமான செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.   

இந்த., உத்திரவு பெற்றிட...! தொடர்ந்து...!
முயற்சி., செய்திட்ட...! நமது NFTE மற்றும் TMTCLU...!
தமிழ் மாநில சங்கங்களுக்கு., நமது......!
நன்றி...! பாராட்டுக்கள்...!

1 comment:

  1. உங்களுக்கு பிறந்த குழந்தைக்கு உங்க பெயரை முன்னால் சேர்க்கலாம் பிறருக்கு பிறந்த குழந்தைக்கு உங்கபெயர் போட்டால் அந்த செயலுக்கு பெயர்என்னவென்று சொல்லுவது இது ஜெகன் வழி செல்லும் சங்கம் இல்லை. தயவு செய்து ஜெகன் பெயரை இழிவு செய்யாதீர்

    ReplyDelete