Sunday 19 March 2017

CMD உடன்... FORUM தலைவர்கள்... சந்திப்பு...


FORUM தலைவர்களான... NFTE பொதுச் செயலர் 
தோழர். C. சந்தேஷ்வர் சிங், BSNLEU பொதுச் செயலர் தோழர். 
P. அபிமன்யூ, SNEA பொதுச் செயலர் தோழர். K. செபாஸ்டின் மற்றும்
AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்
&
ஆகியோர்... CMD BSNL... திரு. ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா
அவர்களை 17-03-2017 அன்று சந்தித்தனர்.

இந்த... சந்திப்பின் போது... நமது CMD அவர்கள்...
இந்த ஆண்டு முதல்... கட்டாயமாக... நாம்... பின்பற்ற வேண்டிய,
கணக்கீட்டு முறையினை தலைவர்களுக்கு விளக்கினார்.

இதுவரை இந்திய நிறுவனங்கள் GAP என்ற...
(General Accounting Principle) கணக்கீட்டு முறையினை... பின்பற்றி...
வந்தனர். ஆனால்... இந்த ஆண்டு முதல்... நிறுவனங்கள்...
Ind AS... என்ற... (Indian Accounting Standards)... கணக்கீட்டு...
முறையினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,
என அரசு அறிவித்துள்ளது.

Ind AS கணக்கீட்டு முறை மற்றும் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
  • இந்த கணக்கீட்டு முறையின் படி நிறுவனங்களின் சொத்து மதிப்பை வேறு வகையில் மதிப்பீடு செய்ய வேண்டும். 
  • அதன்படி... 01-10-2000-க்கு பின் BSNL தனது முக்கிய வியாபாரத்தில் ஈட்டப்பட்ட வருவாயை வைத்து வாங்கிய சொத்துக்களை மட்டுமே அதன் சொத்து மதிப்பிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • அதே சமயம்... புதிய கணக்கீட்டு முறையின்படி... நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களின் மதிப்புகளும் கணக்கில் வரும்.
  • எனவே... BSNL தனது நிலத்தின் மதிப்புகள் முழுவதையும் கணக்கில் கொண்டு வர வேண்டும். 
  • BSNL-ன் சொத்து மதிப்புகளை இந்த நிதி ஆண்டின் கணக்கில் கொண்டு வருவதற்கு..., நிலங்களின் சந்தை மதிப்பை கணக்கீடு செய்து... அதற்கு ஒப்புதல் வழங்க KPMG போன்ற ஒரு நிறுவனத்தை BSNL நியமிக்க உள்ளது.
  • BSNL நிறுவனத்தின் சொத்து மதிப்பு என்பது இன்றைய சந்தை மதிப்பில் ஏறத்தாழ ரூ. 1,50,000/- லட்சம் கோடி முதல் ரூ. 2,50,000/- லட்சம் கோடி வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே இம்மதிப்பை கணக்கில் கொண்டு வரவேண்டும்.
  • இந்த பணியினை 2017 ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.


BSNL நிறுவனத்தின்... சந்தை மதிப்பான...
ஏறத்தாழ... 
ரூ. 1,50,000/- லட்சம் கோடி முதல் ரூ. 2,50,000/- லட்சம்
கோடி வரை மதிப்புள்ள சொத்துக்கள் கணக்கில் கொண்டு வரப்பட்டது,
என்றால்... அது... BSNL நிறுவனத்தின் மதிப்பை மக்கள்...
மத்தியில்... பெருமளவு... உயர்த்தும்...

இந்த பணிக்கு... ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்
சங்கங்கள்... தங்களின்... முழுமையான... ஒத்துழைப்பை... தர...
வேண்டும்... என்று, CMD கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment