Tuesday 21 March 2017

பணிக்குழு கூட்டம்...



சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள... சேலம்
வருவாய் மாவட்டத்திற்கான பணிக்குழு (Works Committee) கூட்டம்...,
28-03-2017 செவ்வாய்கிழமை அன்று காலை 11-30 மணிக்கு...
சேலம்... துணைப் பொது மேலாளர் (NWP - CFA)...
அறையில்... நடைபெறும்... என்று...
அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து மற்றும் ஆலோசனைக்கான ஆய்படுபொருள்கள் (குறிக்கோள்கள்):
  • வெளிக்களப்பணி (Field)-யில் நடைமுறையில் இருக்கும் நமது வேலைகளை பற்றியும், அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனை...
  • நமது BSNL -ல் இருக்கும் வசதி (Facilitys)-களை எந்தந்த பகுதிகளில் விரிவாக்கம்  செய்ய வேண்டும் அதற்கான நோக்கம் பற்றிய ஆலோசனை...
  • நம்முடைய போட்டியாளர்கள் (Competitors) அமுல்படுத்தும் (அ) வழங்கும் பலதரப்பட்ட திட்டங்கள் பற்றியும், அதற்கு சந்தாதாரர்களின் எண்ணங்கள் பற்றிய ஆலோசனை...
  • BSNL -ன் சேவை (Services )-களை எந்தந்த பகுதிகளில் மேம்படுத்த (அ) அமுல்படுத்தி, மேம்படுத்திட வேண்டும் என்பதை பற்றிய ஆலோசனை...
  • BSNL-க்கு தேவையான உபகரணங்கள் / உதிரி பாகங்கள், குறித்த நேரத்தில் கிடைப்பதற்கு உத்திரவாதம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை...
  • BSNL-க்கு தேவையான திட்டங்களை (Project) அமுல்படுத்தும் போது ஏற்படும் இடையூறுகள் பற்றிய ஆலோசனை...
  • BSNL-ல் புதிய சேவைகளை (New Services) மற்றும் திட்டங்களை (Schemes) அமுல்படுத்தும் போது எப்படி சந்தாதாரர்களிடம் கொண்டு போக வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை...

நமது NFTE - BSNL சங்கத்தின் சார்பாக...
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக பங்கேற்பார்கள்...

சேலம் வருவாய் மாவட்டம்:
1. தோழர். A. சண்முகசுந்தரம், TT, Extl -I  மெயின், சேலம்.
2. தோழர். M. அப்துல்லா கான், TT, Sales CM, மெய்யனூர், சேலம்.
3. தோழர். V. சுந்தரமூர்த்தி, TT, Groups, தலைவாசல்.

பணிக்குழுவை பயனுள்ளதாக ஆக்கவேண்டும்...,
ஆக்கபூர்வமான பணிகளை ஆலோசித்து நடைமுறைப் படுத்த...
வேண்டும்... என்பது... நமது NFTE - BSNL சங்கத்தின்... 
வேண்டுகோள் ஆகும்.

உறுப்பினர்களும்... நிர்வாகமும்... 
இதை உணர்ந்து பணிக்குழுவை... பயனுள்ள குழுவாக...
செயல்படுத்திட... நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment