ஒப்பந்த ஊழியர்களுக்கான...
ஊதிய பேச்சுவார்த்தையும்... தீர்வும்...
நமது சேலம் மாவட்டத்தில்... ஒப்பந்த ஊழியர்களுக்கு...
மாதா, மாதம்... சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நாமும் நிர்வாகத்தை சந்திப்பது, கோரிக்கையை வலியுறுத்துவது,
பின்னர் கால தாமதமாக சம்பளம் வழங்குவது
என்பது தொடர் கதை ஆகிவிட்டது.
இந்த அவல நிலையை கண்டித்து... NFTE மற்றும் TMTCLU...
ஆகிய... இரண்டு சங்கங்களும், இணைந்து... 16-03-2017 அன்று சேலம்...
பொது மேலாளர் அலுவலகம் முன்பு, மதிய உணவு இடைவேளை
ஆர்ப்பாட்டம் நடத்திட, திட்டமிட்டு இருந்தோம்.
இந்த போராட்ட அறை கூவலைத் தொடர்ந்து...
ஊதிய பிரச்சனையை மையப்படுத்தி... 15-03-2017 அன்று, மதியம்
03-30 மணிக்கு... பொது மேலாளர் அலுவலகத்தில்...
பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில்... நிர்வாகத் தரப்பில்...,
துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. R. கிருஷ்ணமூர்த்தி...,
உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. C. கந்தசாமி மற்றும்
&
நமது NFTE மற்றும் TMTCLU சங்கங்களின் சார்பில்...
மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், மாநில உதவி செயலர்
தோழர். G. வெங்கட்ராமன், மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P. கஜேந்திரன்,
&
மாவட்ட பொருளர் தோழர். S. காமராஜ், மாவட்ட அமைப்பு
செயலர் தோழர். S.R. செல்வராஜ் மற்றும் TMTCLU மாநில உதவி
செயலர் தோழர். A. சண்முகசுந்தரம் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையில்... விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முடிவுகள்:
- கேபிள் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017 பிப்ரவரி மாத சம்பளமும், House Keeping பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு (2016 டிசம்பர் முதல் 2017 பிப்ரவரி ஆகிய...) மூன்று மாத சம்பளமும் இதுவரை (15-03-2017)... பட்டுவாடா செய்யப்படவில்லை, எனவே இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்)..., ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிதி ரூ. 16.50 லட்சத்தை உரிய ஒப்பந்ததாரரிடம் வழங்கி விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- ஒப்பந்த ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வை (B நகரம் : ரூ. 437/- மற்றும் C நகரம் : ரூ. 350/-) உடனடியாக நமது மாவட்டத்தில் அமுல்படுத்திட வலியுறுத்தி, அதற்கான ஆவணங்களை வழங்கினோம். நமது கோரிக்கை ஏற்கப்பட்டு..., உரிய வழிகாட்டுதல் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதன்... அடிப்படையில்... 16-03-2017... அன்று...
நடைபெற இருந்த..........! மதிய உணவு இடைவேளை..........! .
ஆர்ப்பாட்டம்... தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
நிர்வாகத்தின் உத்திரவாதப்படியே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு 16-03-2017 மற்றும் 17-03-2017 ஆகிய
இரு தினங்களில் உரிய ஊதியம் பட்டுவாடா
செய்யப்பட்டது.
சுமூகமாக... பேச்சுவார்த்தை நடத்தி...
நல்ல முடிவுகள் எடுக்க உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு...!
நமது...! நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:
Post a Comment