Thursday 17 December 2015

TMTCLU... மாவட்ட செயற்குழுக் கூட்டம்...
  



































நமது TMTCLU சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்
கூட்டம் NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் 11-12-2015
வெள்ளிக்கிழமை அன்று மாலை 03.30 மணிக்கு
மாவட்ட தலைவர் தோழர். N.சிவமோகன்
தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட உதவி செயலர் தோழர். P.செல்வம் வரவேற்புரை ஆற்ற...
மாவட்ட துணைத் தலைவர் தோழர். S.கணேசன் அஞ்சலி 
உரை நிகழ்த்தினார்.

ஆய்படுபொருள் ஏற்புக்கு பின் மாவட்ட செயலர் தோழர். 
A.கந்தசாமி விவாதத்திற்கான ஆய்படுபொருளை அறிமுகம் செய்து
வைத்து, மாவட்ட சங்க செயல்பாடுகள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி 
அறிமுக உரை ஆற்றினார்.


NFTE மாநில அமைப்பு செயலர் தோழர். G.வெங்கட்ராமன்,
TMTCLU மாநில உதவி செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் மற்றும்
NFTE மாவட்ட உதவி செயலர் தோழர். P.கஜேந்திரன் 
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செயற்குழுவை செழுமைப்படுத்திட 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த
ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்படு பொருள் விவாதங்களுடன்
தங்கள் பகுதி பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.

TMTCLU மாநில பொதுச் செயலர் தோழர். R.செல்வம், 
TMTCLU மாநில பொருளர் தோழர். M. விஜய் ஆரோக்கியராஜ் மற்றும்
NFTE சேலம் மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் 
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்
நன்றி கூற இரவு 08.30 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 
இனிதே முடிவுற்றது.

80-க்கும் மேற்பட்ட... ஒப்பந்த ஊழியர்கள்... 
பங்கேற்று.... சிறப்பித்தனர்...

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • கேபிள் பணி செய்யும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய ஒப்பந்தம் (New Tender) அமுல்படுத்தும் போது நகர மற்றும் ஊரக (Urban & Rural) பகுதிகளுக்கு ஒரே மாதிரியான ஒப்பந்த முறையை அமுல்படுத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. 
  • மாதந்தோறும்... காலதாமதமின்றி உரிய தேதியில் ஊதிய பட்டியலுடன் (Pay Slip) ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை  எடுக்க நிர்வாகத்தை வலியுறுத்துவது.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ESI மருத்துவ அட்டை வழங்க ஒப்பந்ததாரர் மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்துவது.
  • ஒப்பந்த ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த EPF மற்றும் ESI தொகையை, ஒப்பந்ததாரர் உரிய இடங்களில் முழுமையாக செலுத்துவதை  நிர்வாகம் உத்திரவாத படுத்த மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளின் தீர்விற்காக நிர்வாக தரப்பில் பொறுப்பு அதிகாரியை நியமிக்க இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

1 comment: