Thursday, 17 December 2015

தலைமை செயலகக் கூட்டமும்... முடிவுகளும்...














  
   

  


  


  







நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம்
11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட
சங்க அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர்.
S.கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R.மணி வரவேற்புரை ஆற்ற...
மாவட்ட துணைத் தலைவர் தோழர். M.வீரப்பன் அஞ்சலி 
உரை நிகழ்த்தினார்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான
ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட 
சங்க செயல்பாடுகள், இன்றைய சூழ்நிலை, ஊழியர் பிரச்சனைகள்,
மாவட்ட செயலர்கள் கூட்ட முடிவு, மத்திய செயற்குழு 
முடிவுகள் மற்றும் அமுலாக்கம் பற்றி 
அறிமுக உரை ஆற்றினார்.

மாநில அமைப்பு செயலர் தோழர். G.வெங்கட்ராமன் 
சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் 25 கிளை செயலர்கள், 18 மாவட்ட சங்க 
நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து 
கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.

இறுதியாக... மாவட்ட உதவி செயலர் தோழர். P.சுப்பிரமணி
நன்றி கூற மதியம் 02.15 மணிக்கு தலைமை 
செயலக கூட்டம் இனிதே முடிவுற்றது.

தலைமை செயலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • வெள்ள நிவாரண நிதி வழங்கிய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
  • நமது சேலம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய சிறப்பு கூட்டத்தை 2016 ஜனவரி இறுதிக்குள் நடத்தி முடிப்பது.
  • வேலூரில் நடைபெறும் 5-வது மாநில மாநாட்டிற்கான நன்கொடைகளை அனைத்து கிளைகளும் 2016 ஜனவரி முதல் (அல்லது) இரண்டாவது வாரத்தில் தலைவாசலில் நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வழங்குவது.

No comments:

Post a Comment