Wednesday 2 September 2015

2015 செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்...
ஓர் மகத்தான வெற்றி...
சேலம் மாவட்டம்...! ஓர் பார்வை...!!  
   

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!


அனைத்து மத்திய மற்றும் நமது BSNL தொழிற்சங்கங்களின் 
போராட்ட அறை கூவல்படி நாடு முழுவதும் 02-09-2015 
இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் 
மிகச்சிறப்பாக நடைப் பெற்றது.

நமது சேலம் மாவட்டத்தில்:
மொத்த ஊழியர்கள் (Group C & Group D): 1149
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 718 (62.48%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 190 (16.53%)
பணி புரிந்த ஊழியர்கள்: 239 (20.80%)
அங்கீகரிக்கப்படாத விடுப்பு: 2 (0.17%)

வேலை நிறுத்தம்: 718 (62.48%) மற்றும் விடுப்பு : 190 (16.53%) எடுத்து பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 908 (79.01%)

நமது மாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர் 
சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில்
ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.

கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்திற்க்காக...
தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, ஊழியர் சங்கங்களின்
கூட்டமைப்பு தலைவர்கள், அனைத்து சங்க மாவட்ட செயலர்கள்,
மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை
செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் மற்றும்
ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட ஊழியர்
சங்க கூட்டமைப்பின் வாழ்த்துக்கள்...

மகத்தான வேலை நிறுத்தத்தில்... பங்கு பெற்ற...
அனைத்து வீரர்களுக்கும்... சேலம் மாவட்ட... 
ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பான...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... மற்றும் நன்றிகள்...

தோழமையுடன்...
ச.பாலகுமார்,
மாவட்ட செயலர், NFTE - BSNL
சேலம் SSA.

3 comments: