Thursday, 12 February 2015

தமிழ் மாநில... செயற்குழுவின்...
மரபுகள்... மாண்புகள்... அறிந்திடாத...
மதி... அற்றவர்கள்... எய்த...
அம்புகள்... செய்த... வம்புகள்...















தேசிய கொடியையும்... சங்க கொடியையும்... தோழியர்கள் உயர்த்திட... 
10-02-2015 அன்று காலை 10 மணிக்கு துவங்கியது...
நமது மாநில செயற்குழு... சிறப்பான ஏற்பாடுகளுடன்...!
வரவேற்புரை..., அஞ்சலியுரை முடிந்த மறு நிமிடம்... 
கோவை சுப்பராயன்... சூப்பர் சுப்பராயனாய்... 
தொடங்கி வைத்தார்... வித்திட்டார்... கல... வர... காட்சிக்கு...! 
உடன் துணை புரிந்தார்... கோவை ராமகிருஷ்ணன்... 
பண்பாய்... பக்குவமாய்... பதில் தந்தார்... நமது மாநில செயலர்...! 
எதிர் வினையாளர்கள்...! ஏற்க மறுத்தனர்...!
முடுக்கி... விடப்பட்ட... எந்திரன்கள்...!

மீண்டும்... கோரிக்கை விடுத்தார்... பட்டியலிட்டார்... மாநில செயலர்...!
நம்... முன்... உள்ள  கடமைகளை...
டெல்லி பேரணி - மார்ச் 17 வேலை நிறுத்தம் குறித்து...
செயற்குழு திட்டமிட்டு முடித்ததும்...
தொடுத்திடுங்கள்... கேள்வி கணைகளை... என...!
உருக்கமாய் கேட்டு... உறுதியும் அளித்தார்...!
ஏற்க... மறுத்தனர்... அந்த மூன்று பேர்...!

அமைப்பு விதி... குறித்த சவடாலுக்கு...
தலைவர் லட்சம்... கோடி ரூபாய் தகுதி...
கேள்வியொன்றை... தொடுத்தார்...!

விவாதம்... தொடர்ந்த தருணம்...!
திடு... வென... கோஷத்தோடு... உள் நுழைந்தனர்... 
சென்னை தொலைபேசி தோழர்கள்...!
தமிழ் மாநில செயற்குழுவில்... 
சென்னை தொலைபேசி தோழர்கள் அத்துமீறிய நுழைவு...! 
நியாயமாவென...? நயமாய்... கேட்டார்... மாநில செயலர்...!
பதில்... ஏதுமில்லை...!
மியூசியத்து... மந்திரத்தால்... கட்டுண்டவர்களிடம்...!

அப்பொழுது தான்... அந்த செய்தி வந்தது...! 
CGM... செயற்குழுவை... வாழ்த்திட...! 
செயற்குழு அரங்கு... நெருங்கி விட்டார்... என...!
தன் முயற்சியில்... சற்றும் மனம் தளராது...!
 கோரிக்கை வைத்தார்... மாநில செயலர்... 
அப்படியே... அமருங்கள்... தோழர்களே...! 
CGM உரை நிகழ்த்தி சென்றவுடன்... தொடர்ந்திடுங்கள்...! 
உங்கள்... முழக்கத்தை... என...!
சென்னை தோழர்கள்... செவி மடுக்க வில்லை... கடுகளவும்...!

கூச்சல்... தவிருங்கள்... தோழர்களே...!
மேற்புறம்... மாற்று திறனாளிகளின் கல்வி கூடம்...
+2 தேர்வு தயாரிப்பு...   பணிகள் வேறு...! 
அமைதியான... கத்தோலிக்க... பாரம்பரிய சேவை மையம்...!
சூழல் உணர்ந்து... அமைதி காத்திடுங்கள்... என...
மன்றாடினார்... தோழர் முரளி...! 
உதாசீனபடுத்தி... தொடர்ந்தார்கள்...! 
மியூசியத்து...! மியூசிக்கை...!
அத்துமீறல் தொடர்ந்தது... பாஞ்சாலி சேலை... என...!

CGM வந்தார்... பேசிட... அனுமதிக்கவில்லை... மு(ட)ழக்கவாதிகள்...!
மண்டபத்து பொறுப்பாளர்... மன்றாடினார்... அமைதி காக்க...! 
அவர்களே... வேறு வழியின்றி அழைத்தனர்... காவல் துறையை...!
நமது தோழர்களும்... சேர்ந்து கூட்டத்தை வெளியே தள்ளினோம்...! 
வெளியேற்றப்பட்டனர்... சென்னை தொலைபேசி தோழர்கள்...!
செத்து போன கல்லூரியின்... இத்துப்போன... கட்டளையை ஏற்று...!
சென்னை தொலைபேசி தோழர்கள்...!
அரங்கின் வாசலில்... தொடர்ந்தனர்... அராஜகத்தை...!
 
மாற்றுதிறனாளி... மாணவ... செல்வங்களின்...! 
தேர்வுகள்... கண் முன் நிற்க... 
மனம் மரித்து போனவர்கள் அல்ல... நாம்... என...!
 தீர்மானங்களை இயற்றி...
புதிய மாநில தலைவராக... தோழர். இலட்சம்.
துணைத் தலைவராக... தோழர். பாலசுப்ரமணியன் (தூத்துக்குடி).
அமைப்பு செயலராக... தோழர். வெங்கட்ராமன் (சேலம்).
ஆகியோர்களை... தேர்வு செய்து...!             
முடித்து கொண்டோம்... செயற்குழுவை...!

இத்தனையும்... அரங்கேறிய... பொழுது...! 
செயற்குழு மேடையில்... வலது ஓரத்தில்... ஓர் உருவம்...
அமைதியாய்... சற்றும் சலனமில்லாது... வேடிக்கை பார்த்தது...?

ஊர் வந்து சொன்னோம்... ஓர்... தோழனிடம்...! 
அவரை... அந்த மௌனம் காத்த... தோழனை பற்றி...!
நெஞ்சில் சுருக்கென... தைக்க... சொன்னான்... அந்த தோழன்...
ஜபல்பூர் மாநாட்டில்... பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு...
சம்மேளன செயலர்... பதவி தந்த... உங்களுக்கு...!
இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்... என...!
மொத்தத்தில்... செயற்குழுவை...
முடக்க நினைத்தவர்கள்... முடங்கி போனார்கள்...!
 
முடக்கி... விட்டோம்... என... கொக்கரிக்கும்...!
மதி... அற்ற... அருங்காட்சியக... அற்பர்களுக்கு...! 
தமிழ் மாநிலம்... வீறு கொண்ட... லட்சிய பயணத்தின்...
வரலாறுக்கு... சொந்தமானது...! என்று...!
 
நண்டுகளின்... நாட்டியமும்... ஊளைகளும்...
எங்கள்... கவனம்... சிதைக்காது...!

சிறிய நூல்கண்டா... சிறை படுத்துமென...?
எடுத்துரைத்த... தமிழ் மாநில செயற்குழு...!
வாழ்க..........! வெல்க..........!!

No comments:

Post a Comment