Saturday, 10 January 2015

எழுச்சி குன்றாமல் நடைபெற்ற...

2 ம் நாள் தர்ணா போராட்டம்...




  




  







நமது சேலம் மாவட்டத்தில் கூட்டமைப்பு (FORUM) சார்பாக
அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நாள் தர்ணா போராட்டம் 07-01-2015 அன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு எழுச்சி குன்றாமல் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தோழர்கள். செல்வராஜ் (BSNLEU), 
சின்னசாமி (NFTE-BSNL), சம்பத் (SNEA), சேதுபதி (AIBSNLEA), அன்பழகன்
(TEPU) ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.

தர்ணா போராட்டத்தை NFTE-BSNL மாநில துணைத்
தலைவர் தோழர். ராஜா துவக்கி வைத்து உரை ஆற்றினார்.

BSNLEU மாநில உதவி செயலர் தோழர். S.தமிழ்மணி, 
SNEA மாவட்ட செயலர் தோழர். M.R.தியாகராஜன், 
AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். M.சண்முகசுந்தரம், 
TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, 
NFTE-BSNL மாவட்ட செயலர் தோழர். பாலகுமார், 
BSNLEU மாவட்ட செயலர் தோழர். E.கோபால் 
ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர். S.ஹரிஹரன் 
நன்றி கூறி தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட 
(25 பெண்கள் உட்பட) தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment