Tuesday, 29 January 2019

NFTE மற்றும் TMTCLU இணைந்த ஆர்ப்பாட்டம்


நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018 செப்டம்பர் முதல் (அல்லது) 2018 அக்டோபர் முதல் நான்கு (அல்லது) மூன்று மாதங்களுக்கு (சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர) ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்., உடனடியாக., ஊதியம் பட்டுவாடா செய்திட வலியுறுத்தியும்., 30-01-2019 புதன்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட., NFTE மற்றும் TMTCLU (ஒப்பந்த ஊழியர் சங்கம்) ஆகிய இரண்டு மாநில சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...

நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்., NFTE மற்றும் TMTCLU (ஒப்பந்த ஊழியர் சங்கம்) மாவட்ட சங்கங்களின் சார்பாக., 30-01-2019 புதன்கிழமை அன்று மதியம் 12-30 மணிக்கு சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாபெரும் கோரிக்கை முழக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எனவே தோழர்களே...
நாளை (30-01-2019) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் NFTE மற்றும் TMTCLU ஆகிய சங்கங்களை சார்ந்த தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு... ஒவ்வொரு மாதமும்...
கால தாமதமின்றி... ஊதியம் பெற்றிட... போராடுவோம்...
திரள்வீர்...... தோழர்களே......

தோழமையுடன்...
NFTE - BSNL & TMTCLU, மாவட்டச் சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment