Monday, 28 January 2019

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்...
போராட்டத்திற்கு... ஆதரவளித்திட...
ஆதரவு... ஆர்ப்பாட்டம்...


தமிழகத்தில்., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டு., 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., கடந்த 22-01-2019 முதல் 8 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்., இந்த வீரம் செறிந்த போராட்டத்திற்கு ஆதரவாக., தமிழ் மாநில BSNL ஊழியர்களும் களமிறங்க வேண்டியது., நமது தார்மீக கடமை என்கின்ற அடிப்படையிலும்., போராடும் அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண., தமிழக அரசை வலியுறுத்தியும்., தமிழகம் முழுவதும் 29-01-2019 செவ்வாய்கிழமை அன்று ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட., NFTE மற்றும் TMTCLU (ஒப்பந்த ஊழியர் சங்கம்) தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...

நமது சேலம் மாவட்டத்தில் NFTE மற்றும் TMTCLU (ஒப்பந்த ஊழியர் சங்கம்) மாவட்ட சங்கங்களின் சார்பாக அனைத்து ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். நகர கிளைகளின் சார்பாக., 29-01-2019 செவ்வாய் கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு சேலம்., மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக மாபெரும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தனக்கென மட்டும் இல்லாது...
பொதுவான இயக்கங்களிலும்... பங்கேற்கும் அமைப்பு...
நம் அமைப்பு... NFTE மற்றும் TMTCLU என உரக்க கூவி...
திரள்வோம்... தோழர்களே...

தோழமையுடன்...
NFTE - BSNL & TMTCLU, மாவட்டச் சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment