Wednesday, 30 January 2019

BSNL நிறுவனத்தின் புதிய CMD-ஆக...
திரு. P.K.புர்வார் தேர்வு...


நமது BSNL நிறுவனத்தின் தற்போதைய CMD-ஆக உள்ள திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்களின் பதவிக் காலம் ஜூன் 2019 உடன் முடிவடைகிறது. நமது BSNL நிறுவனத்திற்கு புதிய CMD-ஐ தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வுக் கூட்டம் 29-01-2019 செவ்வாய்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு நடைபெற்றது.

Department of Personal & Training (பணியாளர் மற்றும் பயிற்சி துறை) துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் Public Enterprises Selection Board (PESB - பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வுக் குழு) இதற்கான தேர்வை நடத்தியது.

இத் தேர்வில் நமது BSNL நிறுவனத்தின் சார்பாக:
  • திரு. விவேக் பன்சால்., Principal General Maneger 
  • திரு. T.V.வெங்கட்ராம்., Principal General Maneger 
  • திரு. V.ரமேஷ்., Principal General Maneger
  • திரு. மெருவா ரவிபாபு., Principal General Maneger
  • திரு. அர்விந்த் வட்னெர்கர்., Principal General Maneger
MTNL நிறுவனத்தின் சார்பாக:
  • திரு. பிரவின் குமார் புர்வார்., Chairman and Managing Director
  • திரு. சஞ்சீவ் குமார்., Director (Technical)
 Indian Telecommunication Service நிறுவனத்தின் சார்பாக: 
  • திரு. மகேஷ் ஷுக்லா., Chief General Maneger
  • திரு. அசோக் குமார் ஸ்ரீவஸ்தவா., Principal General Maneger
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக., பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வுக்குழு (PESB - Public Enterprises Selection Board) தற்போது., MTNL நிறுவனத்தின் CMD-ஆக உள்ள திரு. பிரவின் குமார் புர்வார் அவர்களை BSNL நிறுவனத்தின் புதிய CMD-ஆக தேர்ந்தெடுத்துள்ளது. BSNL நிறுவனத்தின் புதிய CMD-ஆக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு. P.K.புர்வார் அவர்களுக்கு., NFTE சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment