AUAB தலைவர்கள் DOT கூடுதல் செயலர்
உடன் சந்திப்பு - ஓர் பார்வை

நமது AUAB கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறை (DOT)-ன் கூடுதல் செயலர் (தொலைத்தொடர்பு) திரு. அன்ஷு பிரகாஷ் ஆகியோர்களுக்கு இடையேயான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை 30-01-2019 புதன்கிழமை அன்று டெல்லி., சஞ்சார் பவனில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில்., AUAB கூட்டமைப்பின் சார்பாக Committee for Periodic Interaction (தொடர் நடவடிக்கைக் குழு)-குழுவில் உள்ள பிரதிநிதிகளான., NFTE பொதுச் செயலர் மற்றும் AUAB தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU பொதுச் செயலர் மற்றும் AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர். P.அபிமன்யூ., SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் மற்றும் AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத்ராய் ஆகியோரும்., DOT சார்பாக Joint Secretary (Admn) திரு. R.K.காண்டேல் வால்., DDG (Estt) திரு. S.K.ஜெயின்., DDG (Budget) திரு. ராஜீவ் குமார் ஆகியோரும்., BSNL சார்பாக இயக்குனர் (மனிதவளம்) திருமதி. T.சுஜாதா ராய் மற்றும் பொது மேலாளர் (ஊழியர் உறவு) திரு. A.M.குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றம்., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு., வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகிய கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 3-வது ஊதிய மாற்ற பிரச்சனையில் 5% சதவீத ஊதிய நிர்ணயப் பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை தொலைத் தொடர்பு துறை (DOT) முன்மொழிந்தது. AUAB கூட்டமைப்பு இந்த ஊதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டால்., 05-02-2019 அன்று நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு., அதன் பின் மத்திய அமைச்சரவையின் (Cabinet) ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தொலைத்தொடர்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு., நமது AUAB கூட்டமைப்பு தலைவர்கள்., 5% சதவீத ஊதிய நிர்ணய பலன் என்பது மிக., மிகக் குறைவானது எனக் கூறி அதனை ஏற்க மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து., தொலைத்தொடர்பு துறை (DOT)-யின் கூடுதல் செயலர் (தொலைத்தொடர்பு)., இப் பிரச்சனை குறித்து CMD BSNL அவர்களுடன் விவாதித்த பின் ஓரிரு நாளில் தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில்., கடந்த 03-12-2018 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 15% சதவீத ஊதிய நிர்ணய பலன் தருவதற்கு சாத்தியமில்லை என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தெரிவித்ததை நாம் நினைவு கூற வேண்டும். மேலும்., தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலர் உடன் நடைபெற்ற கடந்த கூட்டத்தில் 0% சதவீத ஊதிய நிர்ணயப் பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை தொலைத்தொடர்பு துறை (DOT) முன்மொழிந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே போல்., ஓய்வூதிய மாற்ற பிரச்சனையிலும் 5% சதவீத ஓய்வூதிய நிர்ணய பலனுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை தான் தொலைத் தொடர்பு துறை பரிந்துரைத்தது. இதனை AUAB கூட்டமைப்பின் தலைவர்கள் முற்றிலுமாக மறுதலித்தனர். மேலும்., BSNL நிறுவனத்தின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே., BSNL-ன் Affordability பிரிவிற்கும்., BSNL ஓய்வூதியதரர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர். அதன் பின்., தொலைத்தொடர்பு துறையின் கூடுதல் செயலர் (தொலைத்தொடர்பு) ஓய்வூதிய மாற்றம் குறித்து DDG (Estt) திரு. S.K.ஜெயின் அவர்களுடன் விவாதிக்கலாம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து AUAB கூட்டமைப்பின் தலைவர்கள் 01-01-2017-க்கு முந்தைய BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய சூத்திரம் (formula) குறித்து DDG (Estt) அவர்களுடன் விரிவாக விவாதித்தனர். மேலும்., ஓய்வூதிய சூத்திரம் (formula) குறித்த குறிப்பை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
ஓய்வூதிய பங்களிப்பு பிரச்சனையில் தொலைத்தொடர்பு துறை (DOT) தனது பரிந்துரையை செலவினங்களுக்கான துறைக்கு (Department of Expenditure) அடுத்த வாரத்திற்குள் அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
4G அலைக்கற்றை மற்றும் நில மேலாண்மை திட்டம் ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக 05-02-2019 அன்று நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
எனவே தோழர்களே...
நம்பிக்கையோடு காத்திருப்போம்...
போராட்ட களமும் நம்மை எதிர் கொண்டு காத்திருக்கிறது...

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment