Sunday, 3 February 2019

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின்...
போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற...
ஆதரவு ஆர்ப்பாட்டம்..........!


நமது தமிழ் மாநில சங்கத்தின் அறைகூவல்படி., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் (ஜாக்டோ ஜியோ) போராட்டத்திற்கு ஆதரவாக., நமது சேலம் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் NFTE மற்றும் TMTCLU சார்பாக 29-01-2019 செவ்வாய்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு சேலம்., மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக மாபெரும் ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை., NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

NFTE சேலம் மெயின் வெளிப்புறப் பகுதி-I கிளைச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்., NFTE சேலம் மெயின் வெளிப்புறப் பகுதி-II கிளைச் செயலர் தோழர். R.வெள்ளையப்பன்., TMTCLU மெயின் கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு மற்றும் TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கோரிக்கை விளக்க மற்றும் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி ஆதரவு மற்றும் கண்டன  ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













































இந்த ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment