Sunday, 5 March 2017

பொதுத்துறை அதிகாரிகளின்...
ஊதிய மாற்றக்குழு...

Image result for wage revision committee images

பொதுத்துறை அதிகாரிகளின் ஊதிய மாற்றத்திற்கான 3-வது...,
ஊதியக்குழு 2016 ஜூன் 9 அன்று அமைக்கப்பட்டது.
&
இக்குழு..., 2015 நவம்பர் 19 அன்று பரிந்துரை செய்யப்பட்ட...,
மத்திய அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை
கணக்கில் கொண்டு அரசு வழிகாட்டுதலை பல...
அம்சங்களில்... கடைபிடுத்துள்ளது.

ஊதிய  மாற்றக்குழுவின் பரிந்துரைகளில் சில:
  • 3-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
  • ஊதிய நிர்ணயம் என்பது கடைசி 3 ஆண்டுகளின் வரிக்கு முந்தைய லாபத்தில் 20% சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கூடுதலாக இருந்தால் 10% சதவீதம், 5% சதவீதம் மற்றும் ஊதிய நிர்ணயம் இல்லை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • ஊதிய நிலைகள் குறைந்த பட்சம் 1 : 4 அதிக பட்சம் 1 : 7 என அமைக்கப்பட்டுள்ளது.
  • ஊதிய நிர்ணயம் (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) X 15% சதவீதம்.
  • ஆண்டு உயர்வுத்தொகை 3% சதவீதம்.
  • 3 தேக்க நிலை ஊதியம், செயல்பாட்டு திறன் அடிப்படையில் வழங்கப்படும். பதவி உயர்வில் ஊதியம் குறைந்தால் முன்பு பெற்ற ஊதியம் காக்கப்பட்டு, சிறப்பு ஊதியமாக கணக்கில் கொள்ளப்படும்.
  • வீட்டு வாடகைப்படி (HRA) 24% சதவீதம், 16% சதவீதம், 8% சதவீதம் என்றும் அகவிலைப்படி 50% சதவீதம் உயர்ந்தால் 27% சதவீதம், 18% சதவீதம், 9% சதவீதம் என்றும் அகவிலைப்படி 100% சதவீதம் உயர்ந்தால் 30% சதவீதம் 20% சதவீதம் 10% சதவீதம் வழங்கப்படும்.
  • பெர்க்ஸ் மற்றும் அலவன்சுகள் 50% சதவீதத்திலிருந்து 35% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • PRP லாபத்துடன் கூடிய இன்சென்டிவ் திட்டம் தொடரும்.
  • பணிக்கொடை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயரும்.
  • மத்திய அரசு அதிகாரி போலவே அடுத்த 10 ஆண்டுக்கு ஊதிய மாற்றம் இல்லை. 
  • நிறுவன பங்குகளில் ஊழியர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க 25% சதவீதம் வரை மான்யம் ரூ. ஒரு லட்சம் வரை வழங்கப்படும். 
  • ஓய்வூதிய வயது வரம்பில் மாற்றம் இல்லை.
  • விருப்ப ஓய்வு திட்டம் (VRS), அரசு நிதி உதவி இல்லாமல் செய்து கொள்ளலாம், வருட சேவைக்கு 60 நாள் வீதம் வழங்கலாம்.
  • நலிவடைந்த பொதுத்துறைகளில் 2007 ஊதியமே தொடரும்.
  • வெளிப்புற மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 1000/- மாதந்தோறும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment