தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின்...
பிரச்சாரப் பயணம்...
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்...
28-வது..., அகில இந்திய மாநாடு 2017 ஜனவரி 8 முதல் 11
வரை... சென்னையில் நடைபெற இருக்கின்றது.
"மக்கள் பணம் மக்களுக்கே - கார்ப்பரேட் நிறுவனங்கள்
கொள்ளையடிக்க அல்ல"... என்ற - முழக்கத்தை... முன்வைத்து...
13-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...
மக்களும் இந்த கோரிக்கைகளை தெரிந்து கொள்ளும்
விதத்தில்... தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கம்... தமிழகத்தில் 4
முனைகளில் இருந்து...
- குமரி முதல் சென்னை வரை
- உதகை முதல் சென்னை வரை
- சேலம் முதல் சென்னை வரை
- நாகை முதல் சென்னை வரை
ஆகிய பிரச்சார பயணங்கள், ஜனவரி 3-ல் தனது பயணத்தை
தொடங்கி... ஜனவரி
7 அன்று
சென்னையை...
சென்று... அடைகிறது.
இதில்... உதகையில் ஜனவரி 3 அன்று...
தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர்
தோழர். M.ராஜன் தலைமையில் துவங்கிய
பிரச்சாரக்குழு ஜனவரி 5
அன்று மாலை 6 மணிக்கு சேலம் வந்தடைந்தது.
சேலம் வந்தடைந்த... பிரச்சார குழுவிற்கு...
அனைத்து
தொழிற்சங்கங்கள்
சார்பில் வரவேற்பு
அளிக்கப்பட்டு...,
பிரச்சார
கூட்டம் மாலை 6-30 மணிக்கு துவங்கியது.
இக் கூட்டத்திற்கு... Kotak Mahendra வங்கியின் அகில இந்திய தலைவர்
தோழர். K.கொச்சு கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநாட்டு..., பிரச்சார கோரிக்கையினை... விளக்கி...
AITUC சேலம் மாவட்ட பொதுச் செயலர் தோழர். M. முனுசாமி,
NFTE மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார்
&
தமிழ்நாடு
வங்கி
ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர்
தோழர்.
M.ராஜன், AIBEA-வின் மூத்த தொழிற்சங்க தலைவர்
தோழர்.
S.V. கிருஷ்ணமூர்த்தி..., AIBEA-வின்... மாவட்ட செயலர்
தோழர்.
S. சம்பத், சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள்
சங்க செயலர் தோழர். V. ராஜேந்திரன்
&
சேலம் மாவட்ட AIBEA-வின் மகளிர் அணி செயலர்
தோழியர். N. சந்திரா மற்றும் சேலம் மாவட்ட வீட்டு வசதி வாரிய
சங்கத்தின்
செயலர்
தோழர். மோகன் ஆகியோர்
சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக... AIBEA- வின் மாவட்ட உதவி செயலர்
தோழர்.
K. விமல்ராஜ், நன்றி கூறி... பிரச்சார கூட்டத்தை
முடித்து வைத்தார்.
நமது NFTE -BSNL மாவட்ட சங்கத்தின் சார்பில்...
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன், மாவட்ட பொருளர் தோழர்.
S.காமராஜ்,
மாவட்ட அமைப்பு செயலர் தோழர். S.R. செல்வராஜ்,
மாவட்ட
துணைத் தலைவர் தோழர். S.கண்ணையன்
உள்ளிட்ட
25-க்கும் மேற்பட்ட தோழர்கள்
பங்கேற்று
சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment