AIBEA-வின் அகில இந்திய மாநாடு... வெல்லட்டும்...
AIBEA சங்கத்தின்..., 28-வது அகில இந்திய மாநாடு...,
சென்னையில் 08-01-2017 முதல் 11-01-2017
வரை... நடைபெற உள்ளது.
AIBEA-வின் வரலாற்று துளிகளில்... சில...:
- சுதந்திர இந்தியாவிற்கு முன்பாகவே... 1946 ஏப்ரல் 20 அன்று துவங்கப்பட்ட சங்கம்.
- வங்கி துறையில் உள்ள சங்கங்களில் மிகவும் பழமையானதும், பெரும்பான்மையுடனும், வலிமையுடனும், உருக்கு போன்று ஒற்றுமையுடனும் செயல்படுகின்ற சங்கம்.
- 5 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட சங்கம்.
- இந்தியா, மாநிலம், மாவட்டம், நகரம் மற்றும் தாலுக்கா என அமைப்பு ரீதியாக செயல்படும் சங்கம்.
- கடந்த 50 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்ற மாபெரும் சாதனையை 10 முறை இருதரப்பு ஒப்பந்தம் கண்ட சங்கம்.
- 1969 மற்றும் 1980 வங்கிகளின் தேசியமயமாக்கல் இயக்கங்களில் அளப்பரிய பங்குப்பணியை ஆற்றிய பொறுப்பான சங்கம்.
- இன்றும்... வங்கிகளிலுள்ள மக்கள் சேமிப்பு கொள்ளை போகாமல் காத்திட... வாராக்கடன்களை மீட்டிட... தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சங்கம்.
- ஊழியர்களுக்கான சலுகைகளை பெறுவதோடு நின்று விடாமல் வங்கியின் செயல்பாடு, கடன் கொள்கை, மக்கள் பிரச்சனை பொதுத்துறை, விவசாயக்கடன் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வரும் சங்கம்.
இப்படி... பல்வேறு வரலாற்றுச் சாதனைகளுக்கு...
சொந்தமான...
AIBEA-வின் அகில இந்திய மாநாடு சிறக்க... வெல்ல...
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment