புதைந்தது... புரட்சியின்... மொழிப்பெயர்ப்பு...
(பிடல் காஸ்ட்ரோ - 13.08.1926 - 25.11.2016)
உலக வரைப்படத்தில் ஒரு சின்னப் புள்ளி க்யூபா...
உலகை மிரட்டிய..., அமெரிக்காவை எதிர்த்து நின்றதில்...,
உலக வரைப்படத்தில் பெரும் புள்ளி க்யூபா...
அப்படிப் பட்ட...,
க்யூபா என்ற தேசத்தின் பெயர்..., உலகமே அறிந்திட காரணம்...,
பிடல் காஸ்ட்ரோ...
அடைந்தால் சோசலிசம்...,
அடையாவிட்டால் மரணம்...,
சோசலிசத்திற்காக..., மரணம் அடைவேன்...,
மரணத்திற்காக..., சோசலிசத்தை விடமாட்டேன்...,
இதுவே அவரது கொள்கை...
மக்களைத் திரட்டினார்...,
மாபெரும் புரட்சி இயக்கம் நடத்தினார்...
விடுதலையைப் பெற்றார்...,
வீறு கொண்டு எழுந்தார்...
எழுந்தவர் வீழவே இல்லை...,
ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்குப் பின்னும்...,
அமெரிக்க ஏகாதிபத்தியம் 638 முறை...,
புரட்சியாளனைக் கொல்ல முயன்றது...,
அவரது ஆட்சியை அழிக்கத் துடித்தது...,
ஏகாதிபத்தியம் தோற்றிட..., இயற்கை மரணமுற்றார்...
மக்களை திரட்டினார்...,
மக்களுக்காக..., மக்களோடு வாழ்ந்தார்...,
மணிக்கணக்கில் பேசினார்...,
மக்களின் பிரச்சனைகளையேப் பேசினார்...
மக்கள் ஆதரவோடு..., அதிபரானார்...,
தொடர்ந்து..., 50 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்தார்...,
கல்வியும்..., மருத்துவமும்...,
இலவசமாக..., தந்தார்...,
வரலாற்றில்..., அடையமுடியாத..., அழிக்கமுடியாத...,
தனக்கென..., தனி..., இடத்தைப் பிடித்தார்...
சிறந்த புரட்சியாளராக மட்டுமல்ல...,
தொடர்ந்து..., 50 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்தார்...,
கல்வியும்..., மருத்துவமும்...,
இலவசமாக..., தந்தார்...,
வரலாற்றில்..., அடையமுடியாத..., அழிக்கமுடியாத...,
தனக்கென..., தனி..., இடத்தைப் பிடித்தார்...
சிறந்த புரட்சியாளராக மட்டுமல்ல...,
சீர்மிகு..., ஆட்சியாளராகவும்..., திகழ்ந்தார்...
அணிசேரா நாடுகளின் தலைவரானார்...,
அணி சேர்க்க..., அப்பணியிலும்..., அரும்பாடுபட்டார்...
அவரது...,
வெற்றிக்கு காரணம் மார்க்சீயம்...,
மனித நேய ஆட்சிக்கு காரணம் மார்க்சீயம்...
மார்க்சீயம்... அறிந்தவர்கள்...,
மார்க்சீயம்... புரிந்தவர்கள்...,
ஒன்றிணைந்து..., செயல்படுவதே...,
பிடல் காஸ்ட்ரோ- விற்கு...
நாம் செலுத்தும்..., அஞ்சலியாகும்...
புரட்சியாளன்..., தோழர். பிடல் காஸ்ட்ரோ- வின் மறைவிற்கு...,
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்..., செவ்வணக்கம்...!
No comments:
Post a Comment