Sunday, 27 November 2016

செல் கோபுரம் காத்திட... NFBW சார்பாக...
எக்கு கோட்டையில்... எழுச்சியாக நடைப்பெற்ற...
பெருந்திரள் தர்ணா போராட்டம்...


































நமது BSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப்
பிரித்து..., தனி நிறுவனம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரை
வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின் தனியார்
ஆதரவுக் கொள்கையை கண்டித்து...,

நமது சேலம் மாவட்டத்தில்..., NFBW கூட்டமைப்பு..., சார்பாக...,
25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று..., காலை 10-00 மணி முதல் மதியம்
3.00 வரை..., முதன்மை பொது மேலாளர் அலுவலகம், சேலம் -7...,
முன்பாக..., மாபெரும் பெருந்திரள் தர்ணா போராட்டம்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு... NFTE மாவட்ட தலைவர்...
தோழர். S.சின்னசாமி, TEPU மாவட்ட தலைவர் தோழர். P.அன்பழகன்,
SEWA-BSNL மாவட்ட தலைவர் தோழர். G.மணிவண்ணன்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

மிக எழுச்சியாக துவங்கிய... தர்ணா போராட்டத்தை...
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி
வைத்து..., சிறப்புரை ஆற்றினார்.

NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன்,
SEWA - BSNL மாநில துணைத் தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம்
ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

கோரிக்கைகளை... விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, SEWA
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன் மற்றும் BTEU மாவட்ட
செயலர் தோழர். M.பெரியசாமி ஆகியோர்
கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி
கூறி... தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த..., தர்ணா போராட்டத்தில்..., 250-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...,
தர்ணா போராட்டத்தில்..., கலந்து கொண்ட..., அனைத்து தோழர்...,
தோழியர்களுக்கும்..., சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பின்...,
சார்பாக..., நன்றியை..., தெரிவித்துக்
கொள்கிறோம்.

No comments:

Post a Comment