Wednesday 20 February 2019

4-ஆம் நாள் - தெருமுனை பரப்புரை இயக்கம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., அகில இந்திய அளவில் 5 நாட்கள் தொடர்ந்து நடக்கும் தெருமுனை பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் (NFTE - TEPU - TMTCLU) சார்பில்., 4-ஆம் நாள் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு சேலம்., அஸ்தம்பட்டி மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இத் தெருமுனை பரப்புரை இயக்கத்திற்கு NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தெருமுனை பரப்புரை இயக்கத்திற்கான கோரிக்கை முழக்கத்தை NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

NFTE மாவட்ட துணை தலைவர் தோழர். P.தேவா., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R.மணி., மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S.கண்ணையன்., மெயின் கிளைச் செயலர் தோழர். R.வெள்ளையப்பன் மற்றும் மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். R.ராஜசேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.

இறுதியாக NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி தெருமுனை பரப்புரை இயக்கத்தை முடித்து வைத்தார்.

இந்த தெருமுனை பரப்புரை இயக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





























































4-ஆம் நாள் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம் மாவட்ட BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU - TMTCLU) சார்பாக நெஞ்சார்ந்த நன்றி., பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment