Sunday 6 January 2019

எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! TMTCLU என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...! 

திருச்செங்கோடு புதிய கிளை உருவாக்கம்
மற்றும் சிறப்பு மாநாடு


நமது TMTCLU., சேலம் மாவட்ட சங்கத்தின் புதிய மற்றும் ஐந்தாவது கிளையாக., திருச்செங்கோடு கிளை உருவாக்கம் மற்றும் சிறப்பு மாநாடு., திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில்., 03-01-2019 வியாழக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது.

TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் வரவேற்புரை மற்றும் அறிமுக உரை ஆற்ற., TMTCLU மாவட்ட உதவிச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

திருச்செங்கோடு கிளை உருவாக்கம் மற்றும் சிறப்பு மாநாட்டினை துவக்கி வைத்து., TMTCLU மாநில உதவிச் செயலர் மற்றும் NFTE மெயின் கிளைச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம் துவக்க உரை நிகழ்த்தினார்.

மாநாட்டினை வாழ்த்தி., NFTE மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா., NFTE திருச்செங்கோடு கிளைச் செயலர் தோழர். S.கணேசன்., NFTE சங்ககிரி கிளைச் செயலர் தோழர். N.மாதையன்., TMTCLU மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ்., TMTCLU மாவட்ட உதவிச் செயலர் தோழர். P.செல்வம்., TMTCLU மெயின் கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு., TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் மற்றும் TMTCLU நாமக்கல் கிளைச் செயலர் தோழர். K.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

TNTCWU ஊழியர் விரோத சங்கத்தில் இருந்து விலகி., ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற சங்கமான TMTCLU சங்கத்தில்., TNTCWU கிளைப் பொருளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் இணைந்தனர்.

தோழர். S.சக்திவேல் (TNTCWU முன்னாள் கிளைப் பொருளர்)., ஒப்பந்த ஊழியர்., திருச்செங்கோடு மற்றும் தோழர். C.ரவி., ஒப்பந்த ஊழியர்., குமாரபாளையம் ஆகியோர் BSNLEU மற்றும் TNTCWU சங்கத்தின் இயலாமை., ஒப்பந்த ஊழியர் விரோத போக்கு போன்ற வேதனையான அனுபவங்களை எடுத்துரைத்தனர்.

NFTE மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி கருத்துரை ஆற்ற., NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் சிறப்புரை ஆற்றினார்.

நிறைவாக., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., ஒப்பந்த ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில்., ஊக்கம் மற்றும் உற்சாகம் தந்து நிறைவு பேரூரை ஆற்றினார்.

இருபெரும் விழாவின் ஒரு விழாவாக., இணையற்ற விழாவாக., TMTCLU திருச்செங்கோடு கிளை உருவாக்கம் மற்றும் துவக்க விழா நடைபெற்றது.

இவ் விழாவில்., புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

TMTCLU திருச்செங்கோடு கிளையின் புதிய நிர்வாகிகள்:

கிளைத் தலைவர்: தோழர். P.குணசேகரன்., TT., பள்ளிப்பாளையம்.

கிளை துணைத் தலைவர்: தோழியர். K.சம்பூர்ணம்., CL., திருச்செங்கோடு.
கிளை துணைத் தலைவர்: தோழர். T.ரகுநாதன்., CL., திருச்செங்கோடு.

கிளைச் செயலர்: தோழர். S.பிரகாசம்., CL., திருச்செங்கோடு.

கிளை உதவிச் செயலர்: தோழர். S.கணேசன்., TT., திருச்செங்கோடு.    
கிளை உதவிச் செயலர்: தோழர். P.நாகராஜன்., CL., திருச்செங்கோடு.

கிளைப் பொருளர்: தோழர். S.சக்திவேல்., CL., திருச்செங்கோடு.

கிளை அமைப்புச் செயலர்: தோழர். C.ரவி., CL., குமாரபாளையம்.
கிளை அமைப்புச் செயலர்: தோழர். L.நந்தகுமார்., CL., திருச்செங்கோடு.

இறுதியாக., TMTCLU திருச்செங்கோடு புதிய கிளைச் செயலர் தோழர். S.பிரகாசம்., நன்றி கூற இரவு 09-30 மணிக்கு திருச்செங்கோடு கிளை உருவாக்கம் மற்றும் சிறப்பு மாநாடு இனிதே முடிவுற்றது.

ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற இயக்கம்., எங்கள் இனம் காக்கும் இயக்கம்., TMTCLU என உரக்க கூவி., "M" தலைமையிலான TNTCWU இயக்கத்தை புறந்தள்ளி., எம் தலைமையிலான இயக்கத்தில்., TMTCLU-வில் இணைந்து., இதுவே எங்கள் இனம் காக்கும் இயக்கம் என இயக்கப் பற்றுடன் நடைபெற்ற., இவ் விழாவில்., 100-க்கும் மேற்பட்ட., ஊழியர்கள் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.




































































































ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற இயக்கம்., எங்கள் இனம் காக்கும் இயக்கம்., TMTCLU என உரக்க கூவி., "M" தலைமையிலான TNTCWU இயக்கத்தை புறந்தள்ளி., எம் தலைமையிலான இயக்கத்தில்., TMTCLU-வில் இணைந்து., இதுவே எங்கள் இனம் காக்கும் இயக்கம் என இயக்கப் பற்றுடன் நடைபெற்ற., இவ் விழாவில்., 100-க்கும் மேற்பட்ட., ஊழியர்கள் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. BALA & VENKAT TEAM க்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.

    ReplyDelete