Friday 11 January 2019

2019 ஜனவரி 8, 9 - வேலை நிறுத்தம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை


நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!!!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத., மக்கள் விரோத., தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து., அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் நமது NFTE., TMTCLU பேரியக்கங்கள் உள்ளிட்ட BSNL தொழிற்சங்கங்களின் போராட்ட அறைகூவல்படி நாடு முழுவதும் 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது சேலம் மாவட்டத்தில்:
2019 ஜனவரி 8: முதல் நாள் வேலை நிறுத்தம் - ஓர் பார்வை
மொத்த ஊழியர்கள் (Group C & D): 808
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 275 (34.03%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 145 (17.94%)
பணிபுரிந்த ஊழியர்கள்: 388 (48.01%)

வேலை நிறுத்தம்: 275 (34.03%) மற்றும் விடுப்பு: 145 (17.94%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 420 (51.98%)

2019 ஜனவரி 9: 2-வது நாள் வேலை நிறுத்தம் - ஓர் பார்வை
மொத்த ஊழியர்கள் (Group C & D): 808
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 258 (31.93%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 161 (19.92%)
பணிபுரிந்த ஊழியர்கள்: 389 (48.14%)

வேலை நிறுத்தம்: 258 (31.93%) மற்றும் விடுப்பு: 161 (19.92%) எடுத்து
பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 419 (51.85%)

நமது மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.

கடந்த ஒருவார காலமாக வேலை நிறுத்த போராட்டத்திற்காக., தயாரிப்பு பணியில் ஈடுபட்ட., NFTE மற்றும் TMTCLU சங்கங்களின் தலைவர்கள்., மாநில சங்க நிர்வாகிகள்., மாவட்ட சங்க நிர்வாகிகள்., கிளைச் செயலர்கள்., கிளை சங்க நிர்வாகிகள்., முன்னணி தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட NFTE மற்றும் TMTCLU சங்கங்களின் வாழ்த்துக்கள்.

இது பொது வேலை நிறுத்தம் என்று விலகி நிற்காமல்., ஊதியத்தைப் பொருட்படுத்தாமல்., நம் தேசம் காக்கும்., தேச மக்களின் நலன் காக்கும்., பொதுத்துறை காக்கும்., நம் BSNL நிறுவனம் காக்கும் இந்த புனிதப் போரில்., மகத்தான இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற., அனைத்து வீரர்களுக்கும்., தியாகிகளுக்கும்., நமது செந்நன்றி., பாராட்டுக்கள்.

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment