Friday 26 October 2018

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...! சார்பில்...!
ஊதிய மாற்றம் - உரிமைக்குரல் ஒலிக்கும்...!
மாபெரும் தர்ணா போராட்டம்...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G (Spectrum) அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாட்டில்., எந்தவித முன்னேற்றங்களும் இல்லை., எனவே., 08-10-2018 அன்று டெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டமைப்பின் கூட்டத்தில்., கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி., கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்: 
  • BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கிடுக.
  • BSNL வழங்க வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பிற்கு அரசு விதிமுறைகளை அமுல்படுத்துக.
  • BSNL முன்மொழிந்த வரைவு அறிக்கையின் படி BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்க.
  • BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் செய்திடுக.
  • 2-வது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க.

போராட்ட இயக்கங்கள்:
  • 29-10-2018 அன்று நமது கோரிக்கைகளை-ம்., அரசாங்கத்தின் BSNL விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை-ம் விளக்கி மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவது.
  • 30-10-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் முழு நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
  • 14-11-2018 அன்று மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பேரணி நடத்தி., மாநில முதன்மை பொது மேலாளர் (CGM) மற்றும் மாவட்ட பொது மேலாளர் (GM) அவர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது.
  • நமது கோரிக்கைகள் தீரவில்லை எனில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஊழியர்களை திரட்டுவது.

இந்த., போராட்ட முடிவுகளைத் தொடர்ந்து...!

நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்...!
30-10-2018 - செவ்வாய்கிழமை - காலை 10-00 மணி முதல்...!
சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக...!
சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - SEWA BSNL)......!
கூட்டமைப்பு சார்பாக......! மாபெரும்......!
தர்ணா......! போராட்டம்..........!
நடைபெறும்..........!

BSNL ஊழியர்களின் உரிமை காக்கும்...! 
இந்த...!
புனிதப் 
போரில்...! நம் உரிமைப் போரில்...! நாம்...!
அனைவரும்...! 
திரளாக...! 
பங்கேற்போம்...!
நமது...............! 
கோரிக்கைகளை...!
வென்றெடுப்போம்......!

தோழர்களே...!
அணி திரள்வோம்...! ஆர்ப்பரிப்போம்...!
ஊதிய மாற்றம் நம் உரிமை...! எனவே...!
உரிமைக்குரல்...! ஒலிப்போம்...!
உரக்க...! ஒலிப்போம்...!
ஒலிக்காமல் ஏதும்...!
பலிக்காது......!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment