Sunday, 16 September 2018

இருதரப்பு ஊதியக்குழு - ஐந்தாவது கூட்டம்

Image result for committee meeting

நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் ஐந்தாவது கூட்டம் 14-09-2018 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., இருதரப்பு ஊதியக்குழுவின் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இருதரப்பு ஊதியக்குழுவின் இன்றைய கூட்டத்தில் (14-09-2018 அன்று நடைபெற்ற இருதரப்பு ஊதியக்குழுவின் ஐந்தாவது கூட்டத்தில்)., 10-09-2018 அன்று நடைபெற்ற இருதரப்பு ஊதியக்குழுவின் 4-வது கூட்டத்தில்., நிர்வாக தரப்பு முன்மொழிந்த புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. இவ் விவாதத்தில்., ஊழியர் தரப்பு., புதிய ஊதிய விகிதங்களை தாங்கள் விரிவாக பரிசீலித்ததாகவும்., நிர்வாகத்தின்., இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனினும்., புதிய ஊதிய விகிதங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய ஊதிய மாற்றத்தினால் தேக்கநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும்., அதன் அடிப்படையில்., ஊதிய விகிதங்களில் ஏதேனும் மாற்றம் தேவை எனில் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் தேவை என கோரியது. இக் கோரிக்கையினை., நிர்வாக தரப்பு ஏற்றுக்கொண்டது.

இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 28-09-2018 அன்று மாலை 03-30 மணிக்கு நடைபெறும்.

14-09-2018 அன்று நடைபெற்ற இருதரப்பு ஊதியக்குழுவின் கூட்டத்தினைத் தொடர்ந்து., ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்., 28-09-2018 அன்று நடைபெற உள்ள இருதரப்பு ஊதியக்குழுவின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்., ஊழியர்களின் படிகள் திருத்தம் (Perks and Allowances) குறித்து விவாதிக்க ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டம் 25-09-2018 அன்று மாலை 03-00 மணிக்கு NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment