Sunday 5 August 2018

ஊழியர்களின் - புதிய ஊதிய நிலைகள் உருவாக்கத்திற்கான - ஊழியர் தரப்பு கூட்டம்


நமது BSNL ஊழியர்களின்., 3-வது ஊதிய மாற்றத்திற்கான., புதிய ஊதிய நிலைகள் உருவாக்கத்திற்கான., ஊதியக்குழுவின் ஊழியர் தரப்பு கூட்டம் 03-08-2018 அன்று டெல்லியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில்., NFTE சார்பாக அகில இந்தியத் தலைவர் தோழர். இஸ்லாம் அகமது., அகில இந்திய பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் மற்றும் அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். K.S.சேஷாத்ரி ஆகியோரும் BSNLEU சார்பாக அகில இந்தியத் தலைவர் தோழர். பல்பீர்சிங்., அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ., துணைப் பொதுச் செயலர் தோழர். சுவபன் சக்கரவர்த்தி., அகில இந்திய துணைத் தலைவர் தோழர். P.அசோகா பாபு மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர். அனிமேஷ் மித்ரா ஆகியோரும் பங்கு பெற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற., ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவரும்., புதிய ஊதிய நிலைகள் மற்றும் ஊதிய விகிதங்கள் தொடர்பாக சுமூகமான மற்றும் விரிவான விவாதம் நடத்தினர். மேலும்., எந்த ஒரு ஊதிய நிலையில் (NE-1 முதல் NE-12 வரை) இருக்கும் ஊழியர்களுக்கும் ஊதிய தேக்கநிலை எற்படக் கூடாது என்பதில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் உறுதியாக இருந்தனர்.

இறுதியாக., ஊதிய நிலைகள் குறித்து நிர்வாகத்திற்கு கொடுக்கக் கூடிய முன்மொழிவின் வரைவு அறிக்கை தொடர்பாக., இந்தக் கூட்டத்தில்., ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் இடையே., ஒருமித்த கருத்து உருவானது. மேலும்., ஊழியர் தரப்பின் இந்த முன்மொழிவை 06-08-2018 அன்றே நிர்வாகத்திற்கு கொடுத்து விடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் (09-08-2018) நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நாம் தரும் இந்த ஊதிய நிலைகளின் முன்மொழிவு., இதன் மீது நிர்வாக தரப்பு உறுப்பினர்கள்., இதனை பரிசீலனை செய்வதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம்., 09-08-2018 அன்று நடைபெறக் கூடிய இருதரப்பு ஊதியக்குழு கூட்டத்தில் உறுதியான முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கும்.

வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment