Wednesday, 22 August 2018

பக்ரீத் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்


இன்னாள் பொன்னாள் ஈகைத்திருநாள்
இபுராகிம் நபிதந்த தியாகத்திருநாள்
அண்ணார்மகனை அறுக்கத் துணிந்த
அறமே தியாக ஹஜ்பெருநாள்...!

அன்பும் அறமும் அமைதியும் கண்டு
பண்பால் பாசத்தை பகிர்ந்தே உண்டு
கலிமா தொழுகை நோன்பு கண்டு
குர்பான் செய்து குறையின்றி
வாழ்வு கண்டு...!

குற்றங்கள் பெருகா சமுதாயம் கண்டு
கற்றவர் சமூக மாற்றம் கண்டு
ஒற்றுமைக் கயிற்றை பற்றிக் கொண்டு
உலகில் அமைதி என்றும் 
நிலைக்க கண்டு...!

பன்முகம் மக்கள் இன்முகம் கண்டு
பகிர்ந்தே மகிழ்வோம் அன்பினை நன்று
வான்பிறை நிலவை வானில் கண்டு
வாழ்த்துச் சொல்வோம்
வணங்கி நின்று...!

பகுத்துண்டு பண்பாடு போற்றும்
பக்ரீத் நல் வாழ்த்துக்கள்...!

எங்கள் மதமும் மனமும்...! என்றும் ஒன்று என...!
பக்ரீத் தியாகத்திருநாள் நல்வாழ்த்துகளுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment