Sunday 22 July 2018

3-வது ஊதிய மாற்றம் - இருதரப்பு ஊதியக்குழு
முன்னேற்றம் தந்த...! முதல் கூட்டம்...!


நமது BSNL ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு ஊதியக்குழுவின் முதல் கூட்டம் 20-07-2018 அன்று இணக்கமான சூழலில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவர் திரு. H.C.பந்த் (தலைமை பொது மேலாளர் - சட்டம்) - CGM - Legal) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில் நிர்வாக தரப்பில்:
  • திரு. H.C.பந்த்., தலைமை பொது மேலாளர் (Legal) 
  • திரு. சௌரப் தியாகி., முதுநிலை பொது மேலாளர் (Estt)
  • திருமதி. ஸ்மிதா சௌத்ரி., முதுநிலை பொது மேலாளர் (EF)
  • திரு. A.M.குப்தா., பொது மேலாளர் (SR)
  • திரு. A.K.சின்ஹா., துணைப் பொது மேலாளர் (SR)
ஆகியோரும்

ஊழியர் தரப்பில் - NFTE சங்கம் சார்பாக:
  • தோழர். இஸ்லாம் அகமது., அகில இந்திய தலைவர் - NFTE
  • தோழர். C.சந்தேஷ்வர் சிங்., பொதுச் செயலர் - NFTE
  • தோழர். K.S.சேஷாத்ரி., துணைப் பொதுச்செயலர் - NFTE
மற்றும்

ஊழியர் தரப்பில் - BSNLEU சங்கம் சார்பாக:
  • தோழர். பல்பீர் சிங்., அகில இந்திய தலைவர் - BSNLEU
  • தோழர். P.அபிமன்யூ., பொதுச் செயலர் - BSNLEU
  • தோழர். சுவபன் சக்ரவர்த்தி., து.பொதுச் செயலர் - BSNLEU
  • தோழர். P.அசோகா பாபு., துணைத் தலைவர் - BSNLEU
  • தோழர். அனிமேஷ் மித்ரா., துணைத் தலைவர் - BSNLEU
ஆகியோரும் கலந்து கொண்டனர்

இக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக., ஊதியக்குழுவின் செயலர் திரு. A.M.குப்தா (பொது மேலாளர் - ஊழியர் உறவு) அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்த., இருதரப்பு ஊதியக்குழுவின் முதல் கூட்டத்தினை விரைவில் கூட்டியதற்கு ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். மேலும்., இயன்ற அளவிற்கு குறைந்த கால அளவில் ஊதிய மாற்றத்தை இறுதி செய்ய தங்களின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி படுத்தினர்.

அதன் பின்., நிர்வாக தரப்பில்., ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் தொடர்பாக DPE நிறுவனம் 24-11-2017 அன்று வெளியிட்ட., வழிகாட்டுதல்களில் உள்ள பிரிவுகள் பற்றி., அதன் விபரங்கள் பற்றி., விரிவாக விளக்கப்பட்டது.

DPE நிறுவனத்தின் வழிகாட்டுதல்களில் உள்ள., பாரா-6 இல்., மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்., அதிகாரிகளுக்கும்., இடையேயான ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை தவிர்க்க., மத்திய பொதுத்துறை நிறுவனங்களால்., முறைப்படுத்தப்பட்ட பஞ்சப்படி இணைப்பு மற்றும் - அல்லது முறைப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணயத்தை அமுல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்து ஊழியர் தரப்பு விளக்கம் கேட்டது. இது குறித்து., தேவையான விளக்கங்கள் DPE நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

31-08-2018-க்குள் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வகையில் ஊதியக்குழுவின் கூட்டங்களை அடிக்கடி தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என ஊழியர் தரப்பு கோரிக்கை வைத்தது. இக் கோரிக்கையை ஏற்று., நிர்வாக தரப்பு விரைந்து முடிக்க தனது முழு ஒத்துழைப்பை நல்குவதாக உறுதி அளித்தது.

இருதரப்பு ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 09-08-2018 அன்று மாலை 03-30 மணிக்கு நடைபெறும். இக் கூட்டத்தில்., புதிய ஊதிய விகிதங்கள் கட்டுமானம் குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பு: இக் கூட்டத்திற்கு முன்பாக., 3-வது ஊதிய மாற்றத்திற்கான ஊதிய விகிதங்கள் தொடர்பான வரைவு அறிக்கையினை தயாரிப்பதற்கான ஊழியர் தரப்பு கூட்டம் 03-08-2018 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறும். 

No comments:

Post a Comment