Sunday 1 July 2018

3-வது ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக்கான...!
இருதரப்பு ஊதியக்குழு...!



DPE வழிகாட்டுதலின் அடிப்படையில்., நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு., 3-வது ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை துவக்கிட., இருதரப்பு ஊதியக்குழு அமைப்பதற்கான ஒப்புதலை தொலைத்தொடர்பு துறை (DOT) வழங்கி உள்ள நிலையில்., நமது NFTE சங்கம் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய இருதரப்பு ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இறுதியாக 27-06-2018 அன்று நமது பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங் அவர்கள்., முதுநிலை பொது மேலாளர் (SR - ஊழியர் உறவு) திரு. A.M.குப்தா அவர்களை சந்தித்து விவாதித்த போது., 3-வது ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான., இருதரப்பு ஊதியக்குழு அமைப்பதற்கான உத்திரவு 28-06-2018 அன்று வெளியிடப்படும் என உறுதி அளித்தார். மேலும்., இருதரப்பு ஊதியக்குழுவின் தலைவராக நமது CMD அல்லது குறைந்தபட்சம் இயக்குனர் (நிதி) அவர்களை நியமிக்க வேண்டும் என்றும்., ஊதியக்குழுவில் அனைத்து தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக இணைத்திட வேண்டும் என்றும்., நமது பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங் அவர்கள் நமது CMD அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் 28-06-2018 அன்று., 3-வது ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான., இணைந்த இருதரப்பு ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக., BSNL நிர்வாகம்., நமது NFTE-BSNL பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங் அவர்களுக்கும்., BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ அவர்களுக்கும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இருதரப்பு ஊதியக்குழு தொடர்பான...! இக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
  • BSNL நிர்வாகம்., DPE நிறுவனத்தின் 24-11-2017 வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு ஊதிய மாற்றம் குறித்து விவாதிக்கும்.
  • ஊதிய உடன்பாடு அமுல்படுத்தப்படும் முன்பு தொலைத்தொடர்பு துறை (DOT)-க்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
  • ஊதிய மாற்றம் குறித்து விவாதிக்க நிர்வாகத்தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு சார்பாக 10 உறுப்பினர்கள் கொண்ட இருதரப்பு ஊதியக்குழு அமைக்கப்படும்.
  • இந்த இருதரப்பு ஊதியக்குழுவில் நிர்வாகத்தரப்பு சார்பாக 5 உறுப்பினர்களும்., ஊழியர் தரப்பு சார்பாக 5 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.
  • ஊழியர் தரப்பு 5 உறுப்பினர்களில்., முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமான BSNLEU சங்கத்திற்கு 3 உறுப்பினர்களும்., இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கமான NFTE-BSNL சங்கத்திற்கு 2 உறுப்பினர்களும் ஊதியக்குழுவில் இடம் பெறுவார்கள்.
  • ஊழியர் தரப்பு உறுப்பினர்களில்., BSNLEU சார்பாக 3 உறுப்பினர்களையும்., NFTE-BSNL சார்பாக 2 உறுப்பினர்களையும் நியமித்து., இணைந்த இருதரப்பு ஊதியக்குழுவிற்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
இணைந்த இருதரப்பு ஊதியக்குழு உருவாக்கம் என்பது...!
நமது ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தின் வெற்றி...!
என்பதில்...! நாம் பெருமிதம் கொள்வோம்...!

No comments:

Post a Comment