Friday 29 June 2018

AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...!
தொடர் போராட்டமும்...!


BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL - AUAB)
கூட்டம் 26-06-2018 அன்று புது டெல்லியில்., BSNLMS...!
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு., NFTE பேரியக்கத்தின்., துணைப்
பொதுச் செயலர் தோழர். K.S. சேஷாத்திரி.,
தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO,
AIGETOA, BSNLMS, TEPU மற்றும் ATM ஆகிய சங்கங்களின்
பொதுச் செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில்......! அனைத்து சங்க...!
பிரதிநிதிகளின்...! 
தீவிர ஆலோசனை மற்றும்...!
விவாதத்திற்கு பிறகு...! 
கீழ்க்கண்ட...!
முடிவுகள் எடுக்கப்பட்டது...!

AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:
  • மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகள் பரிசீலனை: 24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால்., நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அமைச்சர் வழங்கிய  உறுதிமொழிகளின் மீது  எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. எனவே., கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. 
  • 11-07-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநிலங்களில் உள்ள CCA அலுவலகம் மற்றும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
  • 24., 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.
  • மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் உறுதி மொழிகளை காலதாமதமின்றி அமுல்படுத்திட உடனடியாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்வது.
  • BSNL-க்கு 4G அலைக்கற்றை வழங்குவதில் காலதாமதம்: BSNL நிர்வாகம் வழங்கி உள்ள முன்மொழிவுகளின் அடிப்படையில்., BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதி மொழி அளித்திருந்தார். ஆனால்., இது நாள் வரை., அந்த உறுதி மொழி நிறைவேற்றப் படவில்லை. BSNL நிறுவனம் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் 4G சேவை வழங்காமல் இருப்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் மீட்பு திட்டங்களை அறிவித்துள்ள போதிலும்., BSNL நிறுவனத்திற்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.  எனவே., இந்த கோரிக்கையை ஆழமாக பரிசீலித்த AUAB கூட்டம்., அமைச்சரின் உறுதி மொழியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி., மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுக்கு கடிதம் எழுதுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
  • உயர் அதிகாரிகளுக்கு சிக்கன நடவடிக்கை: BSNL நிறுவனத்தின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி., ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருவது தொடர்பாக., இந்தக் கூட்டம் ஆழமாக விவாதித்தது. இருப்பினும்., உயர் அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பர (Luxury) சலுகைகளுக்கு எந்த ஒரு குறைவும் இல்லை எனவே உயர் அதிகாரிகளுக்கும் சிக்கன நடவடிக்கைகளை அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தி., CMD-க்கு கடிதம் எழுதுவது என முடிவு எடுக்கப்பட்டது.
  • AUAB-ன் நிதி நிலை: சஞ்சார் பவன் நோக்கிய பேரணி மற்றும் சஞ்சார் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் செலவினங்களில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை அனைத்து சங்கங்களும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு எடுக்கப் பட்டு., இக் கூட்டத்திலேயே., NFTE., SNEA மற்றும் BSNLMS ஆகிய சங்கங்கள் தங்கள் பங்கினை வழங்கினர்.
  • துணை டவர் நிறுவனம் அமைத்துள்ளதை எதிர்த்து AUAB கூட்டமைப்பின் முடிவிற்கு ஏற்ப., டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., இவ் வழக்கிற்கு இதுவரை ஒரு இலட்ச ரூபாய் செலவு-ஆகி உள்ளதாக., SNEA-வின் பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டியன் தெரிவித்தார். இதற்கான செலவினங்களை AUAB உறுப்பு சங்கங்கள் பகிர்ந்து கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
  • AUAB-ன் அடுத்தக் கூட்டம்: AUAB-ன் அடுத்த கூட்டம் 04-07-2018 அன்று BSNLMS சங்க அலுவலகத்தில் மாலை 03-00 மணிக்கு நடைபெறும் என்றும் அதில் அனைத்து சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment