Wednesday 16 May 2018

மே 17 - தோழர். ஜெகன் பிறந்த தினம்
NFTE - இளைஞர் தினம்

nfte jegan க்கான பட முடிவு

தொழிற்சங்க நடைமுறையில்...!
புதிய...............! இலக்கணம் படைத்த...!
ஒரு பிரம்மாவின் பிறந்த நாள் இன்று......!

இலக்கணம் மாறாமல் இயக்கம் வளர்த்து...!
இயக்கத்தை இலக்கியமாக செதுக்கிய...!
ஒரு சிற்பியின் பிறந்த நாள் இன்று...!

யார் அந்த பிரம்மா...! யார் அந்த சிற்பி...!
அவர் தான்...! 
தோழர் ஜெகன்...! 
எங்கள் தோழர் ஜெகன்...!

தலைவன் என்று சொன்னால்...!
எங்கள் தலைவனும் நீயே...!

ஆசான் என்று சொன்னால்...!
எங்கள் ஆசானும் நீயே...!

தொண்டன் என்று சொன்னால்...!
எங்கள் தொண்டனும் நீயே...!

தோழன் என்று சொன்னால்...!
எங்கள் தோழனும் நீயே...!

NFTE சங்கம்...! இங்கே., நீ வளர்த்தாய்...!
என்றும் எங்கள் வாழ்வுக்காக நீ உழைத்தாய்...!

எதிர்பவர்க்கும் இனியனாக காட்சி தந்தாய்...!
என்றும்...! எங்கள்...! நெஞ்ச கோவில் நீ இருப்பாய்...!

போராட்டத்தை நடத்தும் போது தீயின் வெம்மை...!
தோழர்...! நடுவே...! பழகும் போது தாயின் மென்மை...!

கொள்கை என்று நிற்கும் போது இமயத் தன்மை...!
உன்னிடம் அன்றோ நாங்கள் கற்றோம் தலைமைப் பண்பை...!

உன்னிடம் ஒளியை இரவல் பெற்ற சந்திரன் நாங்கள்...!
உன்னிடம் வித்தை கற்றுத் தேர்ந்த அர்ஜுனன் நாங்கள்...!

உந்தன் புகழை நாளும் பாடும் பாடகர் நாங்கள்...!
உந்தன் வழியில் என்றும் நடக்கும் தோழர்கள் நாங்கள்...!

ஓய்வு என்று ஏதும் உண்டா...! சூரியனுக்கு...!
உறங்கும் நேரம் ஏதும் உண்டா...! கடல் அலைக்கு...!

தொண்டு இல்லா வாழ்க்கை உண்டா...! உந்தனுக்கு...!
உன்னை விட்டால் சொந்தம்...! ஏது...! எங்களுக்கு...!
உன்னை விட்டால் சொந்தம்...!
ஏது...! எங்களுக்கு...!

இலட்சியத் தலைவன்...! தோழர். ஜெகன்...!
பிறந்த நாளில்...! 
இதயம் தொட்டு...! உறுதி ஏற்போம்...!
ஜெகன் வழிச் செல்வோம்...! 
ஜெகன் வழிச் சொல்வோம்...!

அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!
NFTE...! இளைஞர் தின...! நல் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment