Wednesday 7 February 2018

மாங்கனி மாநகரில்......!
அண்ணல் காந்தி...! அமரத்துவத் தினத்தில்...!
அறவழியில்...! அஞ்சலியோடு...! துவங்கி...!
சரித்திரம் படைத்த...! சத்தியாகிரகப் போராட்டம்...!
முதல் நாள் நிகழ்வு - ஓர் பார்வை


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி.,
ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுலாக்க வேண்டும்., துணை டவர்
நிறுவனம் அமைப்பதை கைவிட வேண்டும்., ஓய்வூதிய மாற்றத்தை
உடனடியாக அமுலாக்க வேண்டும்., ஓய்வு பெறும் வயதை
58-ஆக குறைக்கக்கூடாது மற்றும் VRS திட்டத்தை
கட்டாயமாக்கக்கூடாது உள்ளிட்ட....................!
கோரிக்கைகளை வலியுறுத்தி...!
&
அகில இந்திய அளவில் 5 நாட்கள் தொடர்ந்து நடக்கும்
சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக., நமது சேலம்......!
மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA)
சார்பில்., முதல் நாள் சத்தியாகிரகப் போராட்டம் (உண்மையிலேயே
சத்தியாகிரகப் போராட்டமாக)., அண்ணல் காந்தி....................!
அமரத்துவத்தினமான (நினைவு தினமான) ஜனவரி 30
(30-01-2018) அன்று காலை 09-30 மணிக்கு
அறவழியில் துவங்கியது.

முதல் நாள் சத்தியாகிரகப் போராட்டத்தின்., முதல்
நிகழ்வாக., சேலம்., மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து.,
200-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் அமைதி ஊர்வலமாக சென்று.,
சேலம்., ஓரியண்டல் தியேட்டர் அருகில் உள்ள மகாத்மா
சிலைக்கு., மாலை அணிவித்து., அஞ்சலி 
(ஷ்ரதாஞ்சலி) செலுத்தினோம்.

இந்த அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து., சேலம்.,
ஓரியண்டல் தியேட்டர் முன்பாக அமைக்கப்பட்ட அஞ்சலி
கூடாரத்தில்..........! அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இவ் அஞ்சலி
கூட்டத்திற்கு., NFTE., மாவட்ட தலைவர் தோழர்.
S.சின்னசாமி தலைமை தாங்கினார்.

இவ் அஞ்சலி கூட்டத்தில்., NFTE மாவட்ட செயலர்
தோழர். C.பாலகுமார் மற்றும் SEWA மாவட்ட செயலர்
தோழர். R.மாதையன் ஆகியோர் அஞ்சலி
உரை ஆற்றினர்.

இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து., முறையாக......!
காந்திய அறவழியில்., சத்தியாகிரகப் போராட்டம்., சேலம்.,
மெயின் தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்
(CSC முன்பாக)., காலை 10-30 மணிக்கு..........!
"செத்து மடியாதே...! செய்து முடி...!" 
என்ற...! முழக்கத்துடன்...!
துவங்கியது......!

சுமார் 3-00 மணி நேரம் (காலை 10-30 மணி முதல் மதியம் 01-30 மணி
வரை)., தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம்
மதியம் 1-30 மணிக்கு நிறைவு பெற்றது.

நிறைவாக., சத்தியாகிரக., அறப்போராட்டத்தினைத் தொடர்ந்து.,
கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு., NFTE., மாவட்ட
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை  தாங்கினார்.

இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில்., NFTE மாவட்ட
செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் SEWA மாநில துணைத்
தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம் ஆகியோர்
கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE., மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்
நன்றி கூறி., சத்தியாகிரகப் போராட்டம் மற்றும்
கோரிக்கை விளக்கக் கூட்டத்தினை
முடித்து வைத்தார்.











































 










































மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...!
இருந்து...! முதல் நாள் சத்தியாகிரகப் போராட்டம்
மற்றும்..........! கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட..........!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - BSNL - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment