Monday 26 February 2018

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் உடன்...!
AUAB தலைவர்கள் சந்திப்பு - ஓர் பார்வை...!


நமது BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) தலைவர்கள்
24-02-2018 அன்று நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்
மாண்புமிகு திரு. மனோஜ் சின்ஹா அவர்களை டெல்லி.,
சஞ்சார் பவனில் சந்தித்து., நமது கோரிக்கைகள்
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பேச்சுவார்த்தையில்...!
மத்திய அரசு மற்றும் நிர்வாக தரப்பு சார்பாக...!
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மாண்புமிகு திரு.
மனோஜ் சின்ஹா., DOT செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன்.,
DOT சிறப்பு செயலர் திரு. N.சிவசைலம்., DOT இணை செயலர்
(நிர்வாகம்) திரு. அமித் யாதவ்., DOT துணைப் பொது
இயக்குனர் (Estt) திரு. S.K.ஜெயின்.,
&
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்-ன்
(OSD - Officer on Special Duty) திரு. ஆனந்த்குமார்., BSNL
CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா., இயக்குனர் (HR)
திருமதி. சுஜாதா ராய் ஆகியோரும்
&
தொழிற்சங்க மற்றும் ஊழியர் தரப்பு சார்பாக...!
NFTE பொது செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU.,
பொது செயலர் தோழர். P.அபிமன்யு., SNEA......! பொது செயலர்
தோழர். K.செபாஸ்டியன்., AIBSNLEA...! பொது செயலர்
தோழர். பிரகலாத்ராய்.,  FNTO...! பொது செயலர்
தோழர். K.ஜெயபிரகாஷ்., SEWA-BSNL......!
பொது செயலர் தோழர். N.D.ராம்.,
&
AIGETOA பொது செயலர் தோழர். ரவி ஷில் வர்மா.,
BSNLMS அகில இந்திய தலைவர் தோழர். மல்லிகார்ஜுனா
மற்றும்......! ATM பொது செயலர் தோழர். S.D.சர்மா
உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும்
பங்கேற்றனர்..........!

இப் பேச்சுவார்த்தையில்., விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முடிவுகள்:
  • 3-வது ஊதிய மாற்றம்: BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனை முறையாக விவாதிக்கப்பட்டு., Affordability என்ற நிபந்தனையில் இருந்து., BSNL-க்கு விலக்கு பெற்று., DPE மற்றும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் என மத்திய அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார்.
  • துணை டவர் நிறுவனம்: துணை டவர் நிறுவனம் என்ற பெயரில் BSNL வசம் உள்ள 66000 டவர்கள் பறிக்கப்படுவது குறித்த ஊழியர் தரப்பின் நிலை விளக்கப்பட்டது. ஆனால்., துணை டவர் நிறுவனம் திரும்பப் பெறுவதில்., மத்திய அமைச்சர் எந்தவித உத்திரவாதத்தையும் தரவில்லை.
  • ஓய்வூதிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கும்., BSNL ஊழியர்களுக்கும்., ஓய்வூதியம் குறித்த விதிகள் ஒன்று என்பதாலும்., மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு., ஓய்வூதிய மாற்றம் செய்துள்ள நிலையில்., BSNL ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். என்ற., நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்., BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு DOT செயலருக்கு உத்திரவிட்டார்.
  • ஓய்வூதிய பங்களிப்பு: DoP&T 2006 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உத்திரவின் அடிப்படையில்., BSNL ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்., ஓய்வூதிய பங்களிப்பு பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு DOT செயலருக்கு உத்திரவிட்டார்.
  • BSNL-க்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு: BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை வழங்குவதற்கு தேவையான., உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு., கூடிய விரைவில்., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
  • ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைப்பது: BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைக்கும் எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
  • 2-வது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட பிரச்சனைகள்: 2-வது ஊதிய மாற்றத்தின் போது விடுபட்ட பல்வேறு பிரச்சனைகள்., நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சுட்டிக்காட்டப்பட்டது. இப் பிரச்சனைகளின் மீது., DOT செயலர் தலையிட்டு., உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.
 இப் பேச்சுவார்த்தையின்., இறுதியில்.,
இப் பிரச்சனைகள் குறித்து., 
தொழிற்சங்கங்கள்.,
அமைச்சரையும்., DOT...............! செயலரையும்.,
மீண்டும் சந்திக்கலாம் 
என்று...! 
மத்திய
அமைச்சர் 
தெரிவித்தார்.

இப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன்.,
AUAB கூட்டமைப்பின் கூட்டம்., FNTO சங்க...!
அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்..........!
பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக......!
அனைத்து சங்க தலைவர்களும்., தங்களின் திருப்தியை......!
தெரிவித்தனர். மேலும்., அனைத்து இயக்கங்களிலும்......!
பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்...!
AUAB.........................! கூட்டமைப்பின் சார்பாக...!
வாழ்த்துக்களை தெரிவித்தனர்...!

No comments:

Post a Comment