Friday 19 January 2018

மனநிறைவான...! மாவட்ட செயற்குழு...!


நமது மாவட்ட செயற்குழு மற்றும்...!
சேவைக் கருத்தரங்கம்., சேலம் SSA., பரமத்தி
வேலூர்., கல்கண்டு திருமண மண்டபத்தில்...! 11-01-2018
வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு.,
மிக., எழுச்சியுடன் தொடங்கியது.

வேலூர் கிளைப் பொருளர்., தோழர். M.ஜோதிமணி
தேசியக்கொடியை ஏற்றி வைக்க., வேலூர்., கிளை துணைத்
தலைவர் தோழர். K.கணேசன் நமது சங்க கொடியை
ஏற்றி வைக்க., 250-க்கும்..........! மேற்பட்ட தோழர்.,
தோழியர்கள் பங்கேற்க., செயற்குழு......!
முறையாக., துவங்கியது.

கொடி ஏற்று., நிகழ்வுகளை., தொடர்ந்து., மாவட்டத் தலைவர்
தோழர். S.சின்னசாமி தலைமையேற்று.,
தலைமை உரை ஆற்ற.,
&
வேலூர் கிளைச் செயலர் தோழர். S.வேணுகோபால்
வரவேற்புரை ஆற்ற., நாமக்கல் ஊரக கிளைச் செயலர் தோழர்
K.கணேசன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

ஆய்படுபொருள் ஏற்புக்கு பின்...! மாவட்ட செயலர்...!
தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான ஆய்படுபொருளை
அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட சங்க செயல்பாடுகள், இன்றைய
சூழ்நிலை, நடந்து முடிந்த போராட்டங்கள், மத்திய செயற்குழு,
அகில இந்திய மாநாடு திட்டமிடல், ஊழியர் பிரச்சனைகள்,
AUAB-ன் முடிவுகள் மற்றும் அமுலாக்கம் பற்றி...!
அறிமுக உரை ஆற்றினார்.

செயற்குழுவை வாழ்த்தி., NFTE., தர்மபுரி மாவட்ட
செயலர் தோழர். K.மணி, TMTCLU மாநில உதவிச் செயலர்
தோழர். A.சண்முக சுந்தரம் மற்றும் TMTCLU மாவட்ட
செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக...!
"இத விட ஒசந்தது எதுவும் இல்ல" திட்டமும் - நமது பங்கும்
என்ற தலைப்பில்...! நடைபெற்ற...! சேவைக் கருத்தரங்கில்...!
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன் மற்றும் மாநில..........!
அமைப்பு செயலர் தோழர். L.கண்ணன் ஆகியோர்
கருத்துரை......! வழங்கினர்......!

மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ் தனது.,
சிறப்புரையில்......! சேலம் மாவட்டத்தின் சிறப்பு மற்றும்
ஆற்ற வேண்டிய கடமைகள், மாவட்ட செயலர்களின் கூட்ட............!
முடிவுகள், நடந்து முடிந்த போராட்டங்கள், TMTCLU-வின்.,
உண்ணாவிரத போராட்டம்...! தனி டவர் கம்பெனி...!
போராட்டத் திட்டம் குறித்து., தனது..........!
சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் தனது
நிறைவுரையில்., BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை,
விஜயவாடா மத்திய செயற்குழு, நடந்து முடிந்த போராட்டங்கள்,
ஊதிய மாற்றம், தனி டவர் கம்பெனி, AUAB-ன் முடிவுகள்
மற்றும் அமுலாக்கம், எதிர்கால கடமைகள் பற்றி.,
தனது நிறைவுரையில் எடுத்துரைத்தார்.

செயற்குழுவை செழுமைப்படுத்திட., கிளைச் செயலர்கள்...!
மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்., ஆய்படு பொருள் விவாதங்களுடன்
தங்கள் பகுதி பிரச்சனைகளை., எவ்வித பிரச்சனையும்.,
இன்றி...! எடுத்துரைத்தனர்.

நமது சங்கத்தில் உறுப்பினராக இருந்து (பிப்ரவரி 2017
முதல் டிசம்பர் 2017 வரை) ஓய்வு பெற்ற தோழர்., தோழியர்களுக்கு
பாராட்டு விழா., நடத்தி...! கௌரவிக்கப்பட்டனர்.

நிறைவாக., மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதங்களுக்கு
பதில் அளிக்க., தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்
நன்றி கூற., இரவு 07-00 மணிக்கு செயற்குழு இனிதே முடிவுற்றது.

தோழமையான உபசரிப்பு...! அறுசுவை சைவ & அசைவ உணவு...!
அற்புதமான விருந்தோம்பல்...! தெருவெங்கும் செங்கொடி தோரணம்...!
என....................! சிறப்பான...! ஏற்பாடுகளை...! செய்த...! வேலூர்...!
கிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாவட்ட சங்கத்தின்...! நன்றி பாராட்டுக்கள்...!

மாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:
  • மிக குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழு மற்றும் சேவைக் கருத்தரங்கத்தினை பொறுப்பேற்று., உயர் உபசரிப்புகளுடன் பெரும் செலவுகள் செய்து., மாவட்ட செயற்குழுவை மிக சிறப்பாக நடத்திய., வேலூர் கிளைத் தோழர்களுக்கும்., தோழர். S.வேணுகோபால் தலைமையிலான வரவேற்பு குழுவிற்கும்., மாவட்ட செயற்குழு பாராட்டுகளை., நன்றியை உரித்தாக்குகிறது.
  • 2017 டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும் அதற்காக கடுமையாக உழைத்திட்ட கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவருக்கும் செயற்குழு தனது புரட்சிகர வாழ்த்துக்களை., நன்றியை உரித்தாக்குகிறது.
  • தமிழகத்தில்., ஒரு வார காலமாக நடைபெற்று கொண்டு இருக்கும் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டத்தை., இம் மாவட்ட செயற்குழு ஆதரிக்கிறது. மேலும்., போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை அரசு நீதித்துறையின் உதவியுடன் சீர் குலைக்க நினைப்பது கண்டிக்கப்பட வேண்டியது. எனவே., அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு., பேச்சுவார்த்தை நடத்தி., போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
  • BSNL நிறுவனத்தின் 66,000 செல் கோபுரங்களை பிரித்து., BTCL., என்ற பெயரில் தனித் துணை நிறுவனம் பதிவு செய்துள்ளதையும், அந் நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD)-ஆக திரு. அமித் யாதவ், IAS., அவர்களை நியமித்துள்ளதையும் இச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும்., தனித் துணை நிறுவனத்தை திரும்ப பெற்றிட., இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • 2018 மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்-ல் நடைபெறும் 5-வது அகில இந்திய மாநாடு சிறக்க., நமது மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் / பார்வையாளர்கள் பங்கேற்றிட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும்., அந்தந்த கிளைகளின் சார்பாக., சார்பாளர் மற்றும் பார்வையாளராக பங்கேற்போரின் எண்ணிக்கை மற்றும் பயணத்திற்கான தொகையை 20-01-2018 அன்று நடைபெறும் தலைமைச் செயலக கூட்டத்தில் தவறாமல் செலுத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • சேலம் மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒலிக்கதிர் தனிப்பிரதி வீட்டு முகவரிக்கு அனுப்பிட ஆயுள் சந்தா ரூ. 500/- வசூல் செய்திட இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
  • 1968 வேலை நிறுத்த பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பாக கொண்டாடிட., அனைத்து கிளைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • நமது சேலம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை நடத்தி பெறப்பட்ட விண்ணப்பங்களை 2018 ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் சேர்த்திட இம் மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
  • 6-வது மாவட்ட மாநாட்டினை மிகச் சிறப்பாக 2018 மே (அல்லது) ஜூன் மாதத்தில் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது. அதற்கு முன்பாக., அனைத்து கிளைகளின் மாநாடுகளையும் 2018 மார்ச் 31-க்குள் நடத்திட இச் செயற்குழு வழிகாட்டுகிறது.
  • 7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு., ஒரு அமைப்பின் தொடர் ஊழியர் விரோத போக்கின் காரணமாக., நமது மத்திய., மாநில கூட்டமைப்பின் முடிவுகளை., போராட்ட இயக்கங்களை., நமது சேலம் மாவட்டத்தில்., நாம் நமது கூட்டணி சங்கங்களோடு இணைந்து., தனித்து போராடுவது என்ற முடிவினை., நமது மாநில சங்கத்தின் தொடர் வழிகாட்டுதல் காரணமாக., இனி வரும் காலங்களில்., மத்திய., மாநில AUAB கூட்டமைப்பின் முடிவுகளை., போராட்ட இயக்கங்களை., இணைந்து போராடிட., ஒரு ஒற்றுமையை உருவாக்கிட., முயற்சிப்பது.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும்., காலதாமதமின்றி உரிய தேதியில்., ஊதிய பட்டியலுடன்., ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கையை., எடுக்க., நிர்வாகத்தை வலியுறுத்துவது.
  • ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி., காப்பீடு திட்டத்தை (தனி காப்பீடு திட்டத்தை) அமுல்படுத்திட., நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்களை வலியுறுத்துவது.
  • TMTCLU மாவட்ட மாநாட்டை 2018 பிப்ரவரி மாத இறுதிக்குள் மிகச் சிறப்பாக நடத்துவது.
  • நீண்ட காலமாக நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த தோழர்கள் பாபு மற்றும் குபேந்திரன் ஆகியோரை பணிநீக்கம் செய்த மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும்., அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்திடவும்., சுமூகத் தீர்வு மற்றும் முடிவு எட்டப்படவில்லை எனில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கிடவும்., இச் செயற்குழு வழிகாட்டுகிறது.
  • அடுத்த தலைமை செயலக கூட்டம் 2018 ஜனவரி 20 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.





























































தோழமையான உபசரிப்பு...! அறுசுவை சைவ & அசைவ உணவு...!
அற்புதமான விருந்தோம்பல்...! தெருவெங்கும் செங்கொடி தோரணம்...!
என....................! சிறப்பான...! ஏற்பாடுகளை...! செய்த...! வேலூர்...!
கிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாவட்ட சங்கத்தின்...! நன்றி பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment