Tuesday 9 January 2018

AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...!
தொடர் போராட்டமும்...!



BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின்..........! (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)
கூட்டம் 08-01-2018 அன்று புது டெல்லியில்., FNTO...!
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு., NUBSNLW (FNTO) சங்கத்தின்.,
பொதுச் செயலர் தோழர். K.ஜெயபிரகாஷ்
தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, BTEU,
SEWA - BSNL, TEPU, AIGETOA, BSNLMS, BSNLOA, ATM மற்றும் TOA BSNL
ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக
அமுல்படுத்திடவும்., துணை டவர் நிறுவனம் அமைத்துள்ளதை
திரும்ப பெறுவதை உறுதி செய்திடவும்., தீவிரமான போராட்டங்களை
முடிவு செய்வதற்காக., அனைத்து சங்க பிரதிநிதிகளின்
தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகு
கீழ்க்கண்ட...! முடுவுகள் எடுக்கப்பட்டது.


கோரிக்கைகள்:
  • 01-01-2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 15% சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக...!
  • 01-01-2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்துக...!
  • 2-வது ஊதிய மாற்றக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க...!
  • துணை டவர் நிறுவனம் அமைத்துள்ளதை திரும்ப பெறுக...!
  • BSNL ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58-ஆக குறைக்காதே...! VRS (விருப்ப ஓய்வு திட்டம்) திட்டத்தை கட்டாயமாக்காதே ...!
போராட்டத் திட்டங்கள்:
  • 30-01-2018 அன்று BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL) தலைவர்கள்., டெல்லியில் உள்ள  காந்தி சமாதியில் அஞ்சலி (ஷ்ரதாஞ்சலி) செலுத்துவது., அதன் பிறகு 30-01-2018 முதல் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவது.
  • 30-01-2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை (Work According to Rule) மற்றும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது.
  • 28-02-2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி பெருந்திரள் பேரணி நடத்துவது.
  • BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)   தலைவர்கள் ஒரு வார காலத்திற்குள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, தொலைத்தொடர்பு துறை (DOT) செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன் மற்றும் நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.
  • துணை டவர் நிறுவனம் (BSNL TOWER CORPORATION LIMITED) அமைத்துள்ளதை எதிர்த்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பினை SNEA தலைவர் தோழர். G.L. ஜோகி மற்றும் AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய் ஆகியோருக்கு வழங்குவது.
  • நமது போராட்டங்களை கண்காணிக்க NFTE, BSNLEU, SNEA மற்றும் AIBSNLEA பொதுச் செயலர்களை கொண்ட ஒரு வழிகாட்டும் குழு (Steering Committee)-வை உருவாக்குவது.
  • நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 30.01.2018-க்குள் அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பது. 
எனவே...! தோழர்களே...!
நமது...! தொடர் போராட்டம்...! 
வரலாற்று வெற்றி கண்டிட...!
போர் முரசு கொட்டுவோம்...! 
போராட்ட களத்தை...! வலுவாக்குவோம்...!
நம் போர் வாள்-ஐ இன்னும் கூர் தீட்டுவோம்...!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

No comments:

Post a Comment