Friday 4 August 2017

தொடர்ந்திடும்...! தொண்டறம்...!



ஐம்பத்தைந்து ஆண்டுகள் சங்க - சமூகப் பணி...!

எழுபத்தைந்து அகவை நிறைவு..........!

தோழர். ஆர். கே., 
பணி ஊக்கப்.,

பாராட்டு விழா...!


NFTE என்கின்ற.,
நான்கு எழுத்து இயக்கத்தின்...!
இரண்டு எழுத்து மந்திரம்...!
இயக்கத் தோழர்களின் எந்திரம்...!


இயக்கத்தின் உயிர் மூச்சு...!
சூடேற்றும் அனல் பேச்சு...!

முயற்சியை மூச்சாக்கினாய்...!
கந்தகத்தை பேச்சாக்கினாய்...!

சிந்தித்ததை சந்தித்தவன் நீ...!
சந்தித்ததை சாதித்தவன் நீ...!

எவராலும்.,
விவரிக்க முடியாத விஞ்ஞானி நீ...!
கணிக்கவே இயலாத மெய்ஞானி நீ...!

உன் மௌனம் கூட...!
பலரை பேச வைத்திருக்கிறது...!

உன் முழக்கம்...!
பலர் வாயை மூட வைத்திருக்கிறது...!

தோல்விகளின் முதுகில் ஏறி...!
வெற்றிக் கனிகளை எட்டிப் பறித்தவன்...!

கேள்விகளின் மடியில் அமர்ந்து...!
பதிலாய் நிமிர்ந்து பாதை வகுத்தவன்...!

எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாத வீரம்...!
அடிமட்ட ஊழியர் மீது...
நீ கொண்ட ஈரம்...!

சொல்லால்...! செயலால்...!
உனை வெல்ல எவருமில்லை...!

துணிவில்...!
தோழமையில்...!
உனக்கு இணை யாருமில்லை...!

நீ சொல்லாமல் செய்த 
சாதனைகளைத் தான்...!
வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது...!

ஒரு நூற்றாண்டை...!
தொட்டுக் 
கொண்டு இருக்கும் இயக்கத்தின் வரலாறே...!

வரலாற்று நூல்களில் - ஒருசில தாள்களில்...!
வாழ்கின்ற தலைவர் உண்டு...!
வரலாறே தானாக...! வாழ்க்கையே நூலாக...!
வாழ்கின்ற தலைவர் நீர்...!

நிறை பணி...! கண்டவருக்கோ...!
நிறைவு விழா...! பணி நிறைவு...! பாராட்டு விழா...!

தொடர் பணி...! காணும் உனக்கோ...!
ஊக்க விழா...! பணி ஊக்கப் பாராட்டு விழா...!

ஆம் 2017 ஆகஸ்ட் 05., அன்று...! 
பாசத் தலைவன்...! தோழர். ஆர்.கே-வுக்கு...!
பணி ஊக்கப் பாராட்டு விழா...!

ஐம்பத்தைந்து., ஆண்டுகள் மட்டும் அல்ல...!
ஆயுள் வரை...! தொடர்ந்திடும்...! உன்...! தொண்டறம்...!

உன் தொடர் பணியால்...!
பண் நூறு காண...!
பல்லாண்டு...! பல்லாண்டு...!
பல நூறாண்டு வாழ்ந்திடத்
NFTE., சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நல் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment