Saturday, 18 March 2017

பணிக்கொடை... உச்சவரம்பு... உயர்வு...



7-வது ஊதியக்குழு..., மத்திய அரசு ஊழியர்களின்...
பணிக்கொடை (Gratuity)... உச்சவரம்பை... 01-01-2016 முதல்...
ரூபாய். 10 லட்சத்தில் இருந்து ரூபாய். 20 லட்சமாக
உயர்த்தி இருந்தது.

ஆனால்... இப் பணிக்கொடை உச்சவரம்பு உயர்வை...,
நமது BSNL நிறுவனத்தில் அமுல்படுத்தப்படவில்லை... இந்நிலையில்...
நமது NFTE சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக...
பல்வேறு விளக்கங்களுக்கு பிறகு
&
16-03-2017 அன்று பணிக்கொடை உச்சவரம்பு
உயர்வை..., BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் அமுல்படுத்திட
தொலைத்தொடர்பு துறை (DOT) உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின் படி...:
  • பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு, 01-01-2016 முதல் அமுல்படுத்தப்படும்.
  • பணிக்கொடையின் (Gratuity) அதிகபட்ச உச்சவரம்பு ரூ. 20 லட்சம்.
  • பணிக்கொடை உயர்த்தப்பட்டாலும்..., ஓய்வூதியம் (Pension), குடும்ப ஓய்வூதியம் (Family Pension) மற்றும் ஓய்வூதியத் தொகுப்பு (Commutation) ஆகிய கணக்கீட்டு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment