Monday 8 August 2016

NFBW - மாவட்ட அமைப்பு உருவாக்கம்












நமது NFTE மற்றும் TEPU, SEWA, PEWA ஆகிய சங்கங்களை இணைத்து
அகில இந்திய அளவில் NATIONAL FORUM OF BSNL WORKERS
(தேசிய தொலைத்தொடர்பு தொழிலாளர் கூட்டமைப்பு)
என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இது மாநில மட்டங்களிலும், மாவட்ட மட்டங்களிலும்
உருவாக்கப்பட வேண்டும்... என்ற முடிவினை தொடர்ந்து...,
நமது சேலம் மாவட்டத்தில் NFBW அமைப்பு உருவாக்கத்திற்க்கான
கூட்டம் 03-08-2016 அன்று மாலை 05-00 மணிக்கு..., நமது மாவட்ட
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு... SEWA மாவட்ட தலைவர் தோழர். R.மாதையன்
தலைமை தாங்க..., NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் கூட்ட
நோக்கங்கள் குறித்து விவரித்தார்.

இக்கூட்டத்தில்... NFTE சங்கத்தின் சார்பில்... மாநில உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன், மாவட்ட உதவி செயலர்களான
தோழர்கள். P.கஜேந்திரன், K.தேவராஜன், R.முருகேசன், மாவட்ட
பொருளர் தோழர். S.காமராஜ், மாவட்ட அமைப்பு
செயலர் தோழர்.S.R.செல்வராஜ்

TEPU சங்கத்தின் சார்பில்... மாநில துணைத் தலைவர்
தோழர். P.அன்பழகன், மாவட்ட உதவி செயலர்
தோழர். T.ரவிச்சந்திரன்

SEWA சங்கத்தின் சார்பில்... மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர்செல்வம், மாவட்ட செயலர் தோழர். G.மணிவண்ணன்
மற்றும் மாவட்ட பொருளர் தோழியர். D.ராதா ஜெயலட்சுமி
ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து சங்க மாவட்ட தலைவர்களின் கருத்து பதிவு மற்றும்
விவாதத்திற்கு பிறகு..., NFBW மாவட்ட அமைப்பு
உருவாக்கப்பட்டது.

NFBW சேலம் மாவட்ட அமைப்பு:

தலைவர்: தோழர். P.கிருஷ்ணமூர்த்தி - மாவட்ட செயலர் - TEPU.

ஒருங்கிணைப்பாளர்: தோழர். C.பாலகுமார் - மாவட்ட செயலர் - NFTE.

துணை ஒருங்கிணைப்பாளர்: தோழர். R.மாதையன் - மா.தலைவர் - SEWA.

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதியாக... TEPU மாநில துணைத் தலைவர் தோழர். P.அன்பழகன்
நன்றி கூற இரவு 07-00 மணிக்கு கூட்டம் இனிதே முடிவுற்றது.

கூட்டத்தில்... ஏகமனதாக... எடுக்கப்பட்ட முடிவு:
  • நமது மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக வருகின்ற 2016 ஆகஸ்ட் 12 அன்று நடத்தப்படும் தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்க இணைந்து செயல்படுவது.
  • நமது மாவட்டத்தில் SWAS திட்டம் குறித்து ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் பேரணியில் நமது கூட்டமைப்பு பங்கேற்காது. அதற்கு மாற்றாக...  "நலந்தானா" திட்டம் குறித்து நமது NFBW கூட்டமைப்பு சார்பாக ஆகஸ்ட் நான்காவது (அ) செப்டம்பர் முதல் வாரத்தில் வாடிக்கையாளர் சந்திப்பு இயக்கம் மற்றும் சிறப்பு மேளா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment