Thursday 25 August 2016

போனஸ் குழுக்கூட்டம்...

Image result for bonus

24-08-2016 அன்று டெல்லியில் போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகத்தரப்பில் Sr.GM (Estt), GM (EF), GM (Pers), GM ( Resttg) 
மற்றும் GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊழியர் தரப்பு சார்பாக...
நமது அகில இந்திய பொதுச் செயலர்
தோழர். C.சந்தேஷ்வர் சிங் கலந்து கொண்டார்.

கூட்டத்துளிகளில்... சில...
  • நிர்வாக தரப்பில்... புதிய PLI திட்டத்தில்... DOT-BSNL ஆண்டு MOU உடன்பாட்டின் அடிப்படையில், வருவாய் இலக்குக்கு (Revenue Target) மேல், கூடுதல் வருவாய்க்கு மட்டுமே போனஸ் (PLI) வழங்கப்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் படி... ஒரு கோடி கூடுதல் வருவாய்க்கு..., ஒரு ரூபாய் வீதம் போனஸ் (PLI) கணக்கிடப்படும்.
  • ஊழியர் தரப்பில் இக்கணக்கீட்டு முறையை ஏற்கவில்லை.
  • பண்டிகைக்காலம் நெருங்குவதால் 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுகளுக்கு தற்காலிக போனஸ் (Adhoc PLI) வழங்க வலியுறுத்தப்பட்டது. 
  • நிர்வாக தரப்பில்... 2014-2015-ம் ஆண்டுக்கான போனஸ் ரூபாய். 1100/- என்றும்..., 2015-2016-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையை..., BSNL நிறுவனத்தின் வரவு மற்றும் செலவு தணிக்கைக்கு பிறகு விவாதிக்கலாம் (அ) கணக்கிடலாம் என்று குறிப்பிடப்பட்டது.  
  • ஊழியர் தரப்பில்... இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடுமையாக வாதாடினர்.
  • போனஸ் குழுவின் அடுத்த கூட்டம் 05-09-2016 அன்று நடைபெறும்.

No comments:

Post a Comment